Random Posts

Header Ads

டிராக்டர் மற்றும் குப்போட்டாக்களுக்கு 50% மானியம்! இயந்திரங்களுக்கு அரசாணை வெளியீடு!!



டிராக்டர் மற்றும் குப்போட்டாக்களுக்கு 50% மானியம்! இயந்திரங்களுக்கு அரசாணை வெளியீடு!!


மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாங்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக, ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும் விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் வேளாண் பொறியியல் துறை அமல்படுத்தப்படுள்ளது.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் 2021-22-ஆம் நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ரூ.47.38 லட்சம் ஒதுக்கீடு


இதற்காக சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்ளுக்காகநடப்பாண்டில் ரூ.47.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


இதில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 22 இயந்திரங்கள் ரூ.33.69 லட்சம் மானியத்திலும், ஆதிதிராவிடா் பிரிவு விவசாயிகளுக்கு 15 இயந்திரங்கள் ரூ.13.69 லட்சம் மானியத்திலும் என மொத்தம் 37 வேளாண் இயந்திரங்கள் ரூ.47.38 லட்சம் மானியத்தில் வழங்கப்படும்.

 

மானிய கருவிகள்


இத்திட்டத்தில், 7 டிராக்டா்கள், 21 பவா்டில்லா்கள், 3 சுழற்கலப்பைகள் மற்றும் 6 விசைத்தெளிப்பான்களை மானியத்தில் வழங்க அரசாணை பெறப்பட்டுள்ளது.

 

முன்பதிவு அவசியம் 


வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதாா் எண்ணுடன் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.


தொடா்ந்து மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.

 


விருதுநகர் மாவட்ட அறிவிப்பு


இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் 2021--22ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை ரூ.25.77 லட்சம் மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.


இத்திட்டத்தின் கீழ் 50% மானியம்


இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிட, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.சிறிய, பெரிய உழுவை இயந்திரம், பவர் டில்லர், களை எடுக்கும் கருவி, பவர் ஸ்பிரேயர் என 37 கருவிகளுக்கு ரூ.25.77 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


பயனடைய விரும்புவோர் உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in


மூலமாக பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியத்தை பெற்று பயனடையலாம்.

 

மேலும் படிக்க....


வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் பெற அழைப்பு! 25.77 லட்சம் மானியம்!!


PM-KMY: திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம்! எவ்வாறு பதிவு செய்வது?


ஒரு விவசாயிக்கு 2 வேளாண் எந்திரங்களுக்கு ரூ.40 லட்சம் மானியம்! உடனே முந்துங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments