PM-KMY: திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம்! எவ்வாறு பதிவு செய்வது?
பிரதமரின் கிஸான்
மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு
ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை
உறுதி செய்யும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
PM-KMY திட்டம்
என்றால் என்ன?
பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maandhan Yojana) என்ற திட்டம் நாட்டில் உள்ள விவசாயிகளின் சமூக பாதுகாப்பிற்காகவும், விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 1,2019 நிலவரப்படி மாநிலங்கள்
அல்லது யூனியன் பிரதேசங்களின் நிலப்பதிவுகளில் பெயர் இருக்கும் விவாசயிகள் இந்த திட்டத்தில்
பயன்பெற தகுதியுடையவர்கள்.
இந்த திட்டத்தில்
இவர்கள் பயன் பெற முடியாது!
தேசிய ஓய்வூதிய
திட்டம் (National Pension Scheme), மாநில காப்பீட்டுக் கழகம் பிரதான் மந்திரி ஷ்ரம்
யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana), பிரதான் மந்திரி வியாபரி
மந்தன் யோஜனா (Pradhan Mantri Vyapari Maandhan Yojana) ஆகிய திட்டங்களில் உறுப்பினராக
உள்ளவர்கள் PM-KMY திட்டத்துக்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.
PM-KMY திட்டத்தின்
கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது?
முதலில், பொதுவான சேவை மையம் அதாவது e-சேவை மையம் அணுகவும். இந்த சேவை மைத்தின் நோக்கம், நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு B2C சேவைகளைத் தவிர அத்தியாவசிய பொது பயன்பாட்டு சேவைகள், சமூக நலத் திட்டங்கள், சுகாதாரம், நிதி, கல்வி மற்றும் விவசாய சேவைகளை வழங்குவதற்கான அணுகல் புள்ளிகளாகும்.
இந்த அரசு திட்டங்கள் கீழ் வரும், அனைத்து
விதமான சேவைகளுக்கும் இந்த சேவை மைத்தின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு சென்று,
PM-KMY திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, உங்கள் ஆதார் அட்டையின் எண் மற்றும் உங்கள் வங்கி
கணக்கின் விவரமும் தெரிவிக்க வேண்டும். தேவைப்படுமானால், நகல் ஒன்றை சமர்பிக்கவும்.
PM-KMY -திட்டத்தின்
பயன்கள்
ஒரு குடும்பத்தில்
உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து
கொள்ளலாம்.
பயனாளர் மாதம்
தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000/- என்றும் வருடத்திற்கு 36,000 வீதம் உதவியாக தனது
வயதான காலத்தில் பெறலாம்.
இந்த திட்டத்தில்
இணைந்த விவாசயிகள் ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்தால் , அவருடைய மனைவி திட்டத்தை
தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் வட்டியும் சேர்த்து
மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு தரப்படும்.
ஓய்வூதியம்
பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.
கணவனோ, மனைவியோ
உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.
மேலும் படிக்க....
50% மானியத்தில் இ-வாடகை ஆன்லைன் செயலி-வேளாண் இயந்திரங்கள் முன்பதிவுக்கு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...