Random Posts

Header Ads

வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் பெற அழைப்பு! 25.77 லட்சம் மானியம்!!

 


வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் பெற அழைப்பு! 25.77 லட்சம் மானியம்!!


விருதுநகர் மாவட்டத்தில் 2021-22 ம் நிதியாண்டில் வேளாண்இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ரூபாய் 25.77 லட்சம் மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் குறித்த காலத்தில் பயிர் செய்துசாகுபடி செய்யவும் விவசாயிகளின் நிகர லாபத்தைஉயர்த்திடவும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

 


இத்திட்டத்தின் கீழ் சிறு குறு ஆதிதிராவிடமற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத மானியமும் இதரவிவசாயிகளுக்கு 40 சத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

 

தற்போது பொதுப் பிரிவினருக்கு சிறு உழுவை இயந்திரம் (8-20 எச்பி) 1 எண் பெரியஉழுவை இயந்திரம் (20-40 எச்பி); 1 எண் பவர்டில்லர் 12 எண்கள் ரோட்டவேட்டர் 5 அடி 1 எண் 6 அடி 1எண் களைஎடுக்கும் கருவி 2 எண்கள் பெரிய களை எடுக்கும் கருவி 3 எண்கள் பவர் ஸ்பிரேயர்(8-12லி) 2 எண்கள் பவர் ஸ்பிரேயர்(12-16லி) 4 எண்கள் வழங்கப்படவுள்ளது.

 

மேலும் சிறப்பு கூறு பிரிவினருக்கு பவர் டில்லர் 7 எண்கள் பெரிய களை எடுக்கும் கருவி 1 எண் பவர் ஸ்பிரேயர்(8-12லி) 1 எண்; பவர் ஸ்பிரேயர் (12-16லி) 1 எண் என மொத்தம் 37 எண்கள் ரூ.25.77 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. 



தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தனிப்பட்ட விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை உழவன் செயலியில் பதிவுசெய்துதொடர்ந்து மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலமாக பதிவு செய்து மூதுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


நெல் தரிசு பயிறு வகை சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களும் மற்றும் விதை தரங்களும் சிறப்பு பார்வை!!


மிளகாயில் அசுவிணி பூச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி? மேலாண்மை முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments