மிளகாயில் அசுவிணி பூச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி? மேலாண்மை முறைகள்!!
இராமநாதபுரம்
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராகவன் மற்றும் பூச்சியியல்
துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இளஞ்செழியன் மிளகாய் பயிரில் பூச்சி மற்றும் நோய்
பற்றிய வயல்வெளி ஆய்வு நடத்தினர்.
இராமநாதபுரம்
மாவட்டத்தில் திருப்புல்லானி வட்டாரப் பகுதியான மாலங்குடி, இனிசேரி மற்றும் நைனார்கோவில்
வட்டாரப் பகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை, மும்முடிச்சாத்தான் கிராமங்களில் பயிடப்பட்டுள்ள
முண்டு மிளகாயில் தற்பொழுது அசுவிணியின் தாக்குதலானது ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.
அசுவிணி
அசுவிணியானது
மிளகாய் தவிர கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவா், முள்ளங்கி,
பீட்ருட், கொடி வகை காய்கறிகள் போன்ற பல்வேறு வகையான பயிர்களைத் தாக்குகின்றன. இவை
30 குடும்பங்களைச் சார்ந்த பயிர்களில் 200 வகையான நச்சுயிரி நோய்களைப் பரப்புகின்றன.
இப்பூச்சியானது மிளகாயில் தேமல் நோயினைப் பரப்புகின்றது.
சேத அறிகுறிகள்
அசுவிணியானது இலைகள், பூக்கள், பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகளில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளானது சுருண்டு காணப்படும். மேலும், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னா் உதிர்ந்துவிடும்.
செடிகளின் வளா்ச்சியானது பாதிக்கப்படும்.
இவை தேன் போன்ற கழிவுப்பொருளை வெளியேற்றுவதால் அவை இலைகளின் மீது படிந்து இலைகளானது
மினுமினுப்பாக காணப்படும். இதனால் இலைகளின் மீது கரும்பூஞ்சாணம் படா்ந்து ஒளிச்சோ்க்கை
பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
சாதகமான சூழ்நிலை
- இரவு நேர வெப்பநிலை (20 டிகிரி செல்சியஸ்)
- மாலை நேர ஈரப்பதம் (50 டிகிரி செல்சியஸ்)
- அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை
- காலை நேர ஈரப்பதம்
மேலாண்மை முறைகள்
வயல் வரப்புகளில்
பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதினால் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு மற்றும்
கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் பெருக்கமடையும்.
ஒரு ஏக்கருக்கு
மஞ்சள் ஒட்டும் பொறி 12 என்ற எண்ணிக்கையில் வைத்து அசுவிணியைக் கவர்ந்து அழிக்கலாம்.
அசுவிணியைக்
கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில்
தெளிக்க வேண்டும்.
இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல் 70 மிலி அல்லது பிப்ரோனில் 5 எஸ்சி 200 மிலி அல்லது குயினால்பாஸ் 25ஈசி 200 மிலி.
அடுத்த பருவத்திற்கான
மேலாண்மை முறைகள்
விதைகளை இமிடாகுளோபிரிட்
70 டபிள்யூஎஸ் 12 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
பயன்படுத்துவதற்கான குறிப்பு
கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அதே போல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தின் திறனை அதிகப்படுத்த மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு
100-200 மிலி என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
முனைவர் கு.இளஞ்செழியன், தொழில் நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) மற்றும் முனைவர்
தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை
தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க....
50% மானியத்தில் இ-வாடகை ஆன்லைன் செயலி-வேளாண் இயந்திரங்கள் முன்பதிவுக்கு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...