Random Posts

Header Ads

PM Kisan திட்டம் மூலம் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2000 பெற வாய்ப்பு!!

 


PM Kisan திட்டம் மூலம் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2000 பெற வாய்ப்பு!!


பிரதமரின் PM கிசான் சம்மான் நிதித் திட்டம் அதாவது (PM kisan scheme) 10வது தவணையாக சுமார் 105,072,528 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2000-2000 ரூபாயை செலுத்தப்பட்டது. பதிவு சரியாக இருந்தால், 65 லட்சம் முதல் ஒரு கோடி விவசாயிகளுக்கு இப்போது பணம் கிடைக்கும், வாய்ப்புள்ளது. 


இந்தத் திட்டத்திற்கு நீங்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பிக்க சரியான நேரம், இதுவாகும். இப்போது விண்ணப்பத்திற்காக எந்த அதிகாரியிடமும், செல்ல வேண்டிய அவசியம் இல்லை.


விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் படிவத்தை நிரப்பினால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் தற்போதைய தவணை பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.



நாட்டில் சுமார் 11.50 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ், தங்களை பதிவு செய்துள்ளனர். மோடி அரசின் இந்த முக்கியமான உழவர் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட தொகை மூலம் விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. இதன் மூலம் ஓராண்டில் கிடைத்த ரூ.6000 சிறு விவசாயிகளின் சாகுபடிக்கு உரம், விதைகள் போன்றவற்றை வாங்க உதவியாக உள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது?


  • இணையத்தளத்திற் (https://pmkisan.gov.in/) க்குச் சென்று நீங்களே விண்ணப்பிக்கலாம். 


  • இதற்காக எந்த அதிகாரியையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மேலும் ஒரு நன்மையும் உள்ளது. 


  • நீங்கள் எளிதாக கிசான் கிரெடிட் கார்டை (KCC) எளிதாகப் பெறலாம். இதில் ரூ.3 லட்சம் கடன், 4 சதவீத வட்டியில் கிடைக்கும். 


  • அதன் படிவம் PM Kisan Schemeன் இணையதளத்திலும் கிடைக்கிறது குறிப்பிடதக்கது.

  • முதலில் இந்தத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். 



  • பிறகு வலது பக்கத்தில் FARMER CORNERS என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதில் NEW FARMER REGISTRATION என்பதை கிளிக் செய்யவும். 


  • இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாயிகளின் விருப்பம் உள்ளது. 


  • இதனுடன் நீங்கள் எந்த மொழியில் படிவத்தை நிரப்ப விரும்புகிறீர்களோ, அந்த மொழியில் நிரப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும்


அதில் ஆதார் எண், மொபைல் எண், மாநிலத்தின் பெயரை உள்ளிடவும். இங்கே OTP மற்றும் கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, மற்றொரு படிவம் உங்களுக்குத் திறக்கும். 


இதில், மாநிலம், மாவட்டம், தாலுகா, தொகுதி மற்றும் கிராமம் நிரப்பப்பட வேண்டும். இதில் பாலினம் மற்றும் வகையை பூர்த்தி செய்து, வங்கி பெயர், கணக்கு எண், முகவரி, தாய், தந்தை அல்லது கணவர் பெயர், நில பதிவு ஐடி, ரேஷன் கார்டு எண், பிறந்த தேதி, நிலப் பதிவேடு ஆகியவற்றை சேமித்து வைக்க வேண்டும். 


இவை தொடர்பான சில ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



இந்த திட்டத்தின் கீழ் யார் பயன்பெற முடியாது?


படிவத்தை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


மாநில அல்லது மத்திய அரசில் உள்ள அதிகாரிகளும் இதற்குத் தகுதியற்றவர்கள். தற்போதைய அல்லது முன்னாள் மேயர், அமைச்சர், எம்எல்ஏ ஆகியோரும், இதற்கு தகுதியற்றவர்கள். 


அதேபோல், மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களும் இதில் விண்ணப்பிக்க முடியாது.



விவசாயிகள் இதுவரை பெற்ற தொகை எவ்வளவு?


இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் டிசம்பர் 1, 2018 அன்று நடைபெற்றது. இதுவரை ரூ.1.81 லட்சம் கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும், இதன் கீழ், 14.5 கோடி விவசாயிகளுக்கும் பணம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது, ஆனால் இந்த இலக்கை 36 மாதங்களில் நிறைவேற்ற முடியவில்லை. 


ஆகவே, நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், நீங்கள் தகுதியுடையவர் என்றால், விண்ணப்பிக்க சரியான நேரம் இதுவே, விண்ணப்பித்து பயனடையுங்கள்.


மேலும் படிக்க....


KCC வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்!!


தமிழகத்தில் ரூ.132 கோடி செலவில் பயிர் இழப்பீடு! 1.62 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் பாதிப்பு!!


50% மானியத்தில் இ-வாடகை ஆன்லைன் செயலி-வேளாண் இயந்திரங்கள் முன்பதிவுக்கு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments