குளிர்காலத்தில் பன்றிகளை பராமரித்தல் மற்றும் மேலாண்மை முறைகள்!!
பன்றிகளில்
குளிர்கால மேலாண்மை
பன்றிகளில் குளிர் அயற்ச்சியானது அதன் வளர்ச்சி விகிதம், உடல்நலப் பிரச்சினைகள், மோசமான இனப்பெருக்க செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்தமாக பண்ணையின் வருமானம் குறையும் அபாயத்தை அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி இறுதி வரை சுற்றுச்சூழல் வெப்பநிலையில் தீவிரமான மாறுபாடு காணப்படும் மற்றும் சில நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் குறைந்த சுற்றுப்புற வெப்பநிலை, அதிக ஈரப்பதம் போன்ற காரணங்களால் பன்றிகள் குளிர் அயர்ச்சிக்கு உள்ளாகின்றன.
காற்றின் தரம், ஊட்டச்சத்தின் மீது கவனம் செலுத்துவது
மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற கொட்டகையை தயார்படுத்துவது முக்கியமாகும்.
இப்பருவத்தில்
கொட்டகைகளில் கவனிக்க வேண்டிய மேலாண்மை குறித்த சில குறிப்புகளை காண்போம்.
பன்றிக் கொட்டகை விசாலமானதாகவும், சூரிய ஒளி உள்ளே செல்வதற்கு ஏதுவாக வசதியாகவும் இருக்க வேண்டும். பன்றி கொட்டகையின் வெப்பநிலை 20⁰சதமளவையில் பராமரிக்கப்பட வேண்டும்.
வெப்பமூட்டும்
சூடேற்றிகள் மற்றும் பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பன்றி கொட்டகையின் உள்ளே வெப்பநிலையை
பராமரிக்க முடியும்.
பன்றிகள் ஒன்றுடன்
ஒன்று நெருக்கமாக இருந்தால், அது பன்றிக் கொட்டகையில் சுற்றுப்புற வெப்பநிலை மிகவும்
குறைவாக இருப்பதையும், கொட்டகையில் சில வெப்பமூட்டும் கருவிகளை தொங்க விட வேண்டிய அவசியம்
இருப்பதையும் குறிக்கிறது.
பன்றிக் கொட்டகையில் நீண்ட காலம் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது, தாழ்வெப்பநிலை ஏற்பட்டு பன்றி வளர்ப்பவர்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துகிறது. பன்றிகளின் நகங்கள் நீல நிறமாக மாறும், உடல் வெப்பநிலை குறைகிறது.
உடல் முடிகள் விறைப்புத்தன்மையுடனும், உடல் விறைத்தும் காணப்படும். எனவே
தாழ்வெப்பநிலை ஏற்படுவதற்கு முன்பு, கொட்டகையில் வெப்பநிலையை பராமரிப்பது நல்லது.
மழை நீர் கொட்டகைக்குள்
நுழைவதைத் தடுக்க, 1 மீட்டர் நீளத்திற்கு மேல்புறம் அமைக்க வேண்டும். சிறுநீர் மற்றும்
மலத்தை வெளியேற்றுவதற்கு, கொட்டகையின் தரை மற்றும் வடிகால்கள் சரியான சாய்வைக் கொண்டிருக்க
வேண்டும். இதனால் உலர்ந்த மற்றும் சுகாதாரமான நிலைமைகளை உருவாக்க முடியும்.
4 முதல் 6 அங்குல
ஆழம் கொண்ட வைக்கோல் மற்றும் உமியிலான படுக்கைகளை கொடுக்க வேண்டும். இது, தாழ்வெப்பநிலை
ஏற்படுவதைத் தடுக்கும். கோதுமை தவிடு போன்ற வைக்கோல் இல்லாத அடர்த்தியான கூடுதல் படுக்கைகள்
பன்றிகளுக்கு கூடுதல் வெப்பத்தை அளிக்கும்.
வெப்ப இழப்பைத்
தடுக்க பண்ணையில் சாக்கு பைகள், நெகிழிச் சாக்குகள், தார்ப்பாய்கள் போன்றவற்றால் ஆன
திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும்.
காற்றோட்டம்
மிகவும் முக்கியமானது என்பதால் புதிய காற்று கொட்டகையின் வழியாக நகர்வதை உறுதி செய்ய
வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, கொட்டகையில் நல்ல காற்றோட்டம் நகர்வதை
உறுதி செய்யுங்கள் அல்லது கொட்டகையின் சுவர்களுக்குள் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்.
திறந்தவெளி
கொட்டகைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள், கொட்டகையின் மேற்கூரையை கீழே இறக்கி ஏற்றக்கூடிய
ப்ளைவுட் துண்டு ஒன்றை கொட்டகையின் மேற்பகுதியில் வைப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வெப்பம் அதிகரிக்கும் போது, அது கொட்டகையின் உள்பகுதிக்குள் நீண்ட நேரம் இருப்பதால்
பன்றிகள் வெப்பமாக இருக்கும்.
பன்றிகளுக்கு
புதிய நிலத்தடி நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை வழங்கவும். குளிர்காலத்தில் மிகவும்
குளிராக இருப்பதால் பன்றிகளுக்கு தொட்டியில் சேமித்த தண்ணீரை வழங்குவதைத் தவிர்க்கவும்.
அரிசி தவிடு, கோதுமை தவிடு, மக்காச்சோளம் போன்ற நார்ச்சத்துள்ள தீவனத்தை பன்றிகளுக்கு கொடுப்பதால் இது வெப்பத்தை உருவாக்கி நீண்ட காலத்திற்கு உடல் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது.
கோடைக்காலத்தில்
வழங்குவது போல் சோளம் போன்ற எரிசக்தி மிகுந்த தீவனத்தை கொடுக்கக் கூடாது. புரதச் சத்து
உள்ள பசுந்தீவனங்களை வழங்குவது மலத்தின் வாசனையை குறைக்கிறது.
உடற்பயிற்சியின்மையால்
பன்றிகள் அதிக கொழுப்பாக மாறாமல் இருக்க பன்றிகளுக்கு ஒரு நடைபாதையை கொட்டகையில் வழங்கவும்.
குளிர்கால மாதங்களில்
வெளிச்சமின்மை பன்றிகளின் உண்ணும் மற்றும் உறங்கும் பழக்கத்தை பாதிக்கும் என்பதால்,
கொட்டகையில் சில கூடுதல் ஒளியைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
புதிதாகப் பிறந்த
பன்றிக்குட்டிகள், குளிர், ஈரமான வானிலையால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆண்டின்
குளிர்ந்த மாதங்களில் பெண் பன்றிகள் குட்டிகள் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் மீத்தேன், வாயுக்கள், சுவாசிக்கக்கூடிய தூசி மற்றும் காற்றில் பரவும் நுண்ணுயிரிகள் கொட்டகைக்குள் உள்ள சில முக்கிய மாசுபாடுகளாகும்.
இந்த மாசுபடுத்திகள் பன்றிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனவே அவை குறைக்கப்படாவிட்டால் உடல்நலம் மற்றும் செயல்திறனில் சிக்கல்கள் ஏற்படலாம்.
பன்றி குட்டிகளுக்கு
பைபரசின் கொண்டும் பெரிய பன்றிகளுக்கு ஐர்மெக்டின், பென்பென்டசோல் மருந்து கொண்டு குடற்புழு
நீக்கம் செய்ய இதுவே சரியான நேரம்.
பன்றிகளுக்கு
கோமாரி நோய், பன்றிக்காய்ச்சல் நோய், தொண்டை அடைப்பான் நோய் போன்ற தடுப்பூசிகள் போடப்படவில்லை
என்றால், ஏதாவது ஒன்றை குளிர்காலத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.
தகவல் வெளியீடு
முனைவர்
க. அருணாசலம் மற்றும் ரா. தினேஷ்குமார், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையம், கரூர்-6.
மேலும் படிக்க....
ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! வேளாண் வானிலை மையம் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...