Random Posts

Header Ads

வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிக்கு மானியம்! வேளாண்துறை தகவல்!!



வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிக்கு மானியம்! வேளாண்துறை தகவல்!!


வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், இம்மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து 55 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 


இத்திட்டத்தில் பயன் பெற தகுதிகள்

 

  • வயது 21 முதல் 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


  • கல்வித் தகுதி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற வேலையில்லா பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.


  • சிறந்த கணினி மற்றும் வேளாண் சார்ந்த செயலிகளில் புலகையுள்ள பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.


  • குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர்.



  • நிறுவனம் உரிமை தனியாக இருக்க வேண்டும்.


  • நிலம் மற்றும் அறைகலன்களின் மதிப்பு திட்ட மதிப்பில் சேர்க்க கூடாது.


  • இம்மாவட்டத்தில் 4 நபர்களுக்கு அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில்கள் துவங்க வி்ண்ணப்பபம் செய்யலாம்.

 

தேனையான ஆவணங்கள்

 

  • 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.


  • பட்டதாரி சான்று.


  • ஆதார் அட்டை நகல்.


  • குடும்ப அட்டை நகல்.


  • வங்கி பாஸ் புத்தக நகல்.

 

இதன்படி காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், பசுமை குடில் அமைத்தல், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் தயார் செய்தல், வேளாண் இடுபொருள் விநியோகம், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல், 



வேளாண் வாடகை உழுவை மையம், நுண்ணீர் பாசன சேவை மையம் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது அக்ரி கிளினிக் அமைக்கவும், விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டத்தில் பயனடைய ஆண் மற்றும் பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

தொழில் துவங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம். திட்ட அறிக்கை 22.1.2022 தேதிக்குள் வேளாண்மை இணை இயக்குநர் செங்கல்பட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


குளிர்காலத்தில் பன்றிகளை பராமரித்தல் மற்றும் மேலாண்மை முறைகள்!!


10வது தவணை கிடைக்கவில்லையா! பணம் அனுப்பும் பணி மார்ச் 31 வரை தொடரும்!!


விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி! அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments