கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் பயன்கள் மற்றும் அதன் சத்துக்கள்!!



கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் பயன்கள் மற்றும் அதன் சத்துக்கள்!!


பசுந்தீவனம் – அதிக ஊட்டச்சத்துக்கள், சுவை மற்றும் கால்நடைகளுக்கு குளிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சமச்சீரான தீவனத்தை கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் கொடுப்பதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகமாக்கலாம். 


கலப்பினக் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அடர் தீவனத்துடன் சேர்த்து அளிப்பதன் மூலம் கால்நடைகளின் உண்மையான பால் உற்பத்தித் திறனை பெறலாம்.

 


பசுந்தீவனத்தின் பயன்கள் மற்றும் அதன் சத்துக்கள்


பசுந்தீவனத்தில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளதால் கால்நடைகளுக்குத் தேவையான எரிசத்தைக் கொடுக்கின்றன.


பசுந்தீவனத்தில் 70 – 80 % நீர்ச்சத்து உள்ளதால் கால்நடைகளுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. கால்நடைகளின் உடல் வெப்பத்தைப் போக்குகின்றது.


பசுந்தீவனத்தை கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.


கால்நடைகள் சினைப் பிடிக்கவும், வளரவும் மற்றும் பால் உற்பத்திக்கும் பசுந்தீவனத்தில் உள்ள புரதச்சத்து இன்றியமையாதது.


மாடுகளின் வயிற்றில் உள்ள ஒரணு உயிரிகள் உயிர் வாழ, எண்ணிக்கையில் பெருக பசுந்தீவன மாவுச்சத்து உதவுகின்றது.



ஏ-வைட்டமின் சத்து உற்பத்திச் செய்ய தேவைப்படும் கரோட்டின் புரதம் பசுந்தீவனத்தில் அதிகம் உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏ-வைட்டமின் முக்கியமானதாகும். பசுந்தீவனத்தில் உள்ள தாது உப்புக்கள் கால்சியம் சத்தும், பாஸ்பரஸ் சத்தும் முக்கியமானவை.


வைக்கோல் உடன் பசுந்தீவனமும் சேர்த்து அளிப்பதன் மூலம் அதன் செரிமானத்தை அதிகரிக்கலாம். பசுந்தீவனத்தை பதப்படுத்தி 'சைலேஜ் மூலம் கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.


 

தானியவகை பசுந்தீவனம்


இவை தீவன மக்காச்சோளம் – ஆப்பிரிகன் நெட்டை, தீவனச் சோளம் (கோ – 27, கோ –10, கோ எஃப் எஸ் – 29) மற்றும் தீவன கம்பு (கோ – 8) பயிர்கள். தானியவகைப் பயிர்களில் புரதச்சத்து குறைவாகவும் (6-10 ரூ), எரிச்சத்து அதிகமாகவும் (50 – 60 ரூ) இருக்கும். மற்றவகைப் பயிர்களைவிட பசுந்தீவன மகசூல் அதிகமாக இருக்கும். தீவனச் சோளம் பூக்கும் காலத்தில் அறுவடை செய்து கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

புல்வகை பசுந்தீவனம்


இவை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ – 1, கோ – 2, கோ – 3, கோ – 4), கொழுக்கட்டை புல் (கோ – 1), கினியா புல் (கோ – 1, கோ – 2) மற்றும் நீர் புல் வகைகள். புல்வகை தீவனப் பயிர்களில் புரதச்சத்து 6 – 10 ரூ இருக்கும்.

 


பயறுவகை பசுந்தீவனம்


இவை வேலி மசால், குதிரை மசால், பெர்சீம், முயல் மசால், காராமணி மற்றும் சிராட்ரோ பயிர்கள். இவ்வகைப் பயிர்கள் மண்ணின் வளத்தையும் மேம்படுத்தும். 


இப்பயிர்கள் புரதச்சத்து 15-25ரூ கொண்டு உள்ளது. மகசூல் தானியவகைப் பயிர்களை காட்டிலும் குறைவாக இருக்கும். மற்ற புல் மற்றும் உலர் தீவனத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும். பயறுவகை தீவனங்களை கால்நடைகளுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது.

 

தீவன மரங்கள்


மரங்களின் இலைகளில் புரதச்சத்து அதிகமாக (15-30%) இருக்கும். இவை அகத்தி, சவுண்டல், சித்தகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, கொடுக்காபுளி மரங்கள். பெரு மரங்களில் புரதச்சத்து ஈ15 % இருக்கும். இவை பூவரசு, ஆல மரம், அரச மரம், மாமரம் மற்றும் வேப்ப மரம்.

 


வறட்சியான காலத்திலும் பசுந்தீவனமாக மர இலைகள் விளங்குகின்றன. மர இலைகளை உபயோகப்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு குறைகிறது. மர இலைகளில் கால்சியம் சத்து அதிகமாக, பாஸ்பரஸ் சத்து குறைவாக இருக்கும். மர இலைகளில் சில வேதிப் பொருட்கள் உள்ளதால், இலைகளுடன் மற்ற தீவனங்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

 

  • சோளம்

  • தீவனச்சோளம் (கோ எஃப் எஸ் – 29)


  • முயல் மசால்


  • அகத்தி

 

மேலும் விவரங்களுக்கு, முனைவர் அ.லட்சுமிகாந்தன். உதவிப் பேராசிரியர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு மற்றும் மா. ராஜேஸ் கண்ணன், உழவியல் உதவியாளர், KVK. காட்டுப்பாக்கம். தொடர்புக்கு : 04372-234012-4225.

 

மேலும் படிக்க....


கால்நடைகளில் ஏற்படும் நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை முறை தீர்வுகள்!!


பார்பரி வெள்ளாடுகள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்!!


3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் ரூ. 2 லட்சம் வரை கடன்- கால்நடைத்துறை தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments