கால்நடைகளில் ஏற்படும் நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை முறை தீர்வுகள்!!

 


கால்நடைகளில் ஏற்படும் நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை முறை தீர்வுகள்!!


விவசாயிகளுக்கு என்றும் உற்ற நண்பனாக விளங்கும் கால்நடைகளுள் ஒன்று மாடுகள். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அவற்றை தாக்கும் எண்ணற்ற நோய்களை கடந்து வருகின்றனர். 


அவற்றால் பலத்த பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நோய்களுக்கு விவசாயிகளே செய்யக்கூடிய எளிமையான பாரம்பரிய முறையிலான தீர்வுகளை இப்பகுதியில் அறியலாம்.

 


உண்ணிகள் மூலம் காய்ச்சல்


பெபிசியோசிஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல் ஆனது பெபிசியா எனும் ஒரு செல் இரத்த ஒட்டுண்ணிகளால் உண்ணிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவக்கூடியது. 


பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிக காய்ச்சல், இரத்தம் கலந்து காபி நிறத்தில் சிறுநீர் காணப்படும். உண்ணிகளும் மாடுகளின் மேல் காணப்படும். அத்தகைய மாடுகளுக்கு சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்து அரைக்கப்பட்ட கீழாநெல்லி தழைகளை வாய்வழியாக ஒரு வாரத்திற்கு கொடுத்தால் இந்நோய் குணமாகும்.

 


மடி நோய் / மித மடி நோய்


மடி நோய் கறவை மாடுகளை அதிகம் தாக்கி நேரடியாக பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. நோய் வந்த மாடுகளில் மடி வீக்கமும், பாலின் தன்மையும் மாறுபடும். மடியின் எந்த காம்பிலும் இந்த பாதிப்பு வரலாம். நுண்கிருமிகள் காரணமாகவே பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. 


கால்நடை பராமரிப்பில் ஏற்படும் சுகாதாரக் குறைபாட்டினால் இந்த பாதிப்பு உண்டாகிறது. மடி நோய் தாக்கிய கறவை மாடுகளுக்கு சோற்றுக் கற்றாழை, மஞ்சள் தூள், வேப்பிலை, சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிவப்பு நிறமாக நன்றாக அரைத்து, பால் கறந்த பின்பு மடியின் மீது காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு வாரத்திற்கு பூசினால் மடி நோய் முற்றிலும் குணமடையும்.


 


ஈப்புழுவால் பெரிதாகும் புண்கள்


கால்நடைகளில் ஏற்படும் காயங்களை கவனிக்காவிட்டால் அவற்றில் தொற்று ஏற்பட்டு, ஈக்கள் மொய்த்து சீழ் பிடித்து, புழு வளரும் புண்களாக மாறுகின்றன. ஈக்கள், வண்ண ஈக்கள் போன்ற பூச்சிகளின் முட்டையில் இருந்து வரும் புழுக்களே இந்த புண்கள் ஆறாமல் இருப்பதற்கு காரணம். 


இந்த புண்களில் நுண்கிருமிகள் வளரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகைய காயங்களில் சிறிதளவு வேப்ப எண்ணெய் தடவி அதனுடன் கற்பூர தூளை பூசினால் புழுக்கள் அனைத்தும் வெளியேறுவதுடன், காயங்கள் சீக்கிரம் ஆறும்.

 

சினைப்பருவ பிரச்சனைகள்


சில கிடேரிக் கன்றுகளில் ஒன்றரை வயதைக் கடந்த பின்பும் சினைப் பருவத்தை அடையாமல் இருக்கும். கருப்பை வளர்ச்சி குறைவு மற்றும் குறைந்தளவு கருமுட்டை நுண்அறைகள் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படும். 



அத்தகைய கிடேரிகளுக்கு காலை வேளையில், தண்ணீரில் நன்கு ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை ஒரு கையளவு இருபது நாட்களுக்கும், பிறகு தண்ணீரில் ஊற வைத்த கொள்ளு ஒரு கையளவு பத்து நாட்களுக்கும் வாய் வழியாக கொடுத்தால் நல்ல அறிகுறிகளுடன் மாடுகளில் சினைப் பருவம் வெளிப்படும். ஒரு சில மாடுகள் தவறாமல் சினை பருவத்திற்கு வந்தாலும், சினை ஊசி போட்டும் சினை நிற்பதில்லை. 


அத்தகைய மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்துவிட்டு, சினைப் பருவத்தின் போது காலை வேளையில் நன்கு அரைக்கப்பட்ட கருவேப்பிலையை சிறிதளவு வாய்வழியாக கொடுத்த பின்பு சினை ஊசி செலுத்தினால் சினை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

மாடுகளில் கருப்பை பிரச்சனைகள்


சில மாடுகளில் கன்று ஈன்ற பின்னரோ அல்லது கன்று வீச்சினாலோ, நுண்கிருமிகளால் கருப்பை அறையில் சீழ் பிடித்து துர்நாற்றத்துடன் நச்சு வெளியேறும். அத்தகைய மாடுகளுக்கு காலை வேளையில் சிறிதளவு அகத்திக்கீரையுடன் ஒரு வெள்ளை முள்ளங்கியை ஐந்து நாட்களுக்கு வாய்வழியாக கொடுத்தால் கருப்பை சீராகும்.

 


மேலும் விவரங்களுக்கு, முனைவர் அ.லட்சுமிகாந்தன், மருத்துவர் ம.க.விஜயசாரதி, உதவிப் பேராசிரியர்கள், முனைவர் ர.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு. தொடர்புக்கு : 04372-234012-4225.


மேலும் படிக்க....


பார்பரி வெள்ளாடுகள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்!!


சுர்தி வெள்ளாடு வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்!! சுர்தியின் சிறப்புகள் என்ன?


மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) ரூ.20,050 கோடி செலவில் மீன் வளர்ப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPSஎன்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments