டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!

 


டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!

 

டி.ஏ.பி. உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும் சல்பர், கால்சியம் போன்ற நுண்ணூட்ட உரங்கள் சிறிதளவு உள்ளன. சூப்பர் பாஸ்பேட் உரம் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தில் கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாகக் கிடைக்கிறது. மேலும் நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

 


நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு சல்பர் அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய்ச் சத்துடன், எண்ணெய்ச் சத்துப் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.

 

சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள பாஸ்பேட் எளிதில் கரையும் உரம் என்பதால் சூப்பர் பாஸ்பேட் எனப் பெயர் பெற்றுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்களான தென்னை மற்றும் நிலக்கடலை, தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவைப்படும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கிப் பயன் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

வளர்ந்த தென்னை மரத்திற்கு யூரியா 1.2 கிலோ கிராம், சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ கிராம், பொட்டாஷ் 2 கிலோ கிராம் என்றளவில் நேரடி உரங்களைப் பயன்படுத்துவதால் உரப் பயன்பாடு அதிகரிக்கிறது. ஒரு மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தின் விலைரூ.385/-.

 


மேலும், விவசாயிகள் சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம் மட்கிய தொழு உரத்துடன் பரிந்துரைக்கப்பட்ட சூப்பர் பாஸ்பேட் உரத்தினைக் கலந்து 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை அடியுரமாக பயிர் சாகுபடிக்கு முன் இடுவதனால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.

 

எனவே விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்குப் பதில் விலை குறைவான சூப்பர் பாஸ்பேட் உரத்தினைப் பயன்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க....


பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!


உரம் தொடர்பான தகவல்களை பெற மற்றும் புகார்களை கூற மாநில அளவிலான உதவி மையம்!!


ரூ.58,430 கோடி செலவில் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Timeto Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments