தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூ.13,490 மானியம்!!

 


தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூ.13,490 மானியம்!!


தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்ற முன்வரும் விவசாயிகளுக்கு கு ஹெக்டேருக்கு ரூ.13,490 மானியமாக வழங்கப்படும் என திண்டுக்கல் வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தரிசு நிலங்கள்


பொதுவாக விளைநிலங்களில், அந்தந்தத் தட்பவெப்பநிலைக்கு ஏற்று பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டுவது எளிதான காரியம்.



ஆனால், விவசாயத்திற்கு மிகவும் சவாலான இலக்கு என்றால், அது, தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற முயற்சி மேற்கொள்வதுதான். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.


அட்மா திட்டம்


இது தொடர்பாக திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ.நாகேந்திரன் கூறியதாவது:


வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றுவதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்றும்போது, உணவு உற்பத்தி அதிகரிக்கும்.



ரூ.13,490 மானியம்


மேலும், மானாவாரி பயிா்களை சாகுபடி செய்வதால் விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கும் வழி ஏற்படுகிறது. இத்தகைய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டங்களின் மூலம் ஒரு ஹெக்டோ் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவதற்கு ரூ.13,490 மானியம் வழங்கப்படுகிறது.

 

20 ஹெக்டோ் நிலம்


இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் வட்டாரத்தில் 20 ஹெக்டோ் தரிசு நிலம், விளை நிலமாக மாற்றுவதற்கு மானியத் தொகை வழங்கப்படும்.அதேபோல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்களின் மூலமாகவும் தரிசு நிலங்கள் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

 

இத்திட்டத்தின் கீழ், 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாக உருவாக்கி, அந்த பகுதியில் அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.



விவசாயிகளுக்கு பயிற்சி


தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!


வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் நட மானியம்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!


லேசர் கருவி மூலம் நிலத்தை துல்லியமாக சமப்படுத்துதல் தொழில்நுட்பம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments