நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்!!

 


நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்!!


புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதனை கட்டுப்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு மணமேல்குடி வேளாண்மை உதவி இயக்குநர் வனஜாதேவி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 


குலைநோயின் அறிகுறிகள்


நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரை தாக்குகிறது.இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மைய பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். 


பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். இந்நோய் தீவிரமாக தாக்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் தோன்றுகிறது.நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும் போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர் மணிகள் சுருங்கியும் கதிர்கள் உடைந்தும் தொங்கும். 


இந்நிலையில் இது கழுத்துக் குலைநோய் எனப்படும்.இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும் போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்து விடும் நிலையானது கணுக் குலைநோய் எனப்படும்.

 


மேலாண்மை முறைகள்


குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைபிடித்தல் வேண்டும்.நோயற்ற பயிரிலிருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.


வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும்.இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 


புகையான் ஒரு தத்துப்பூச்சி


புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்து கொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. 


இதனால் பயிர்கள் வட்ட வடிவில் திட்டுதிட்டாகக் காயத் தொடங்கும். பின்னர் எரிந்து புகைந்தார் போல காணப்படும். மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பாகவே காய்ந்து விடுவதால் மணிகள் முற்றாமல் பதராகி விடும். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும் நெருங்கி நடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

எனவே விவசாயிகள் வயல் வரப்புகளை தூய்மையாக வைத்திருப்பதோடு நெற்பயிரை நெருக்கமாக நடுவதை தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும். அல்லது எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும். வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். 


மேலும் யூரியா போன்ற தழைசத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்து பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையானை கட்டுப்படுத்தலாம்.

 


புகையானின் தாக்குதல் அதிகமாகும் பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல் 40 மி.லி இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர் பகுதியில் நன்கு படும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். 


இவ்வாறு நெற்பயிரில் தோன்றும் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திடுமாறும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகிடுமாறும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!


நெல் பயிரில் நோய் தாக்குதல் நேரடி கள ஆய்வு! மேலாண்மை முறைகள்!!


நெல் பயிர் பாதுகாப்பு முறைகளும், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments