ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! வேளாண் வானிலை மையம் தகவல்!!


ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! வேளாண் வானிலை மையம் தகவல்!!


சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன், (வேளாண் கால நிலை கண்காணிப்பாளர்) கூறியதாவது,

 

சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (06.01.2022 முதல் 11.01.2022 வரை) மழை இல்லை. ஒரு சில வட்டாரங்களில் மிக லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31oC ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை19oC ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 0 முதல் 6 கி.மீ ஆக வீசக்கூடும்.

 


நிலவக்கூடிய வானிலையின் காரணமாக வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த நோய்க்குட்பட்ட இலைகளை அகற்றி எரித்து விடவும் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தினை 2.5 கிராம்/லிட்டர் என்றளவில் நவம்பர் மாதம் முதல் மாத இடைவெளியில் தெளிக்கவும்.


மஞ்சளில் இலைப்புள்ளி நோய் மேலாண்மைக்கு, கார்பன்டாசிம் @ 500 கிராம்/எக்டர் அல்லது மாங்கோசெப் – 1 கிலோ/எக்டர் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு @ 1.25 கிலோ/எக்டருக்கு.



நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் தென்பட்டால் ப்ரோபிகோனசோல் 25 EC @ 500 மி.லி. /ஹெ அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 77 WP @ 1.25 கிலோ /ஹெ – புடை வெளி வரும் தருணம் மற்றும் 50 சதவீதம் பூக்கும் நிலைகளில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

 

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ யின் அறிகுறிகள் தென்பட்டால்


  • என்கார்சியாகுவாடலூபாவின் வெளியீடு @ 100 ஒட்டுண்ணிகள் / ஏ (10 இலைகள் / ஏ).

  • ஆமணக்கு எண்ணெயுடன் பூசப்பட்ட மஞ்சள் ஒட்டும் பொறிகளை (5 அடி x 1.5 அடி) நிறுவுதல் 5 / ஏ.


  • கிரைசோபெர்லாஜஸ்ட்ரோவிசில்மி முட்டைகள் @ 500 / ஏ வெளியீடு.


  • இயற்கை எதிரிகளை பாதுகாக்க பூச்சிக்கொல்லி விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்.


மஞ்சளில் இலைப்புள்ளி நோய் மேலாண்மைக்கு, கார்பன்டாசிம் @ 500 கிராம்/எக்டர் அல்லது மாங்கோசெப் – 1 கிலோ/எக்டர் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு @ 1.25 கிலோ/எக்டருக்கு அல்லது புரோபிகோனசோல் @ 500 மிலி/எக்டருக்கு.



மிளகாயில் இலைப்பேன் மேலாண்மைக்கு இமிடாக்ளோபிரிட் 70 WS @ 12 கிராம் / கிலோ விதை உடன் விதைகளை நேர்த்தி செய்யவும். பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.


ஸ்பைனெட்டோரம் 11.7 SC @1.0 மி.லி ./லிட்டர்

அசிடமிப்ரிட் 20 SP@ 1.0 கிராம் /10 லிட்டர்

எமாமெக்டின்பென்சோயேட் 5 % SG @ 4.0 கிராம் /10 லிட்டர்

 

நிலவக் கூடிய வானிலையின் காரணமாக மிளகாயில் சாம்பல் நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 1 கிராம்/லிட்டர் என்றளவில் மூன்று தெளிப்புகள் தெளிக்கவும் மற்றும் அறிகுறிகள் தெரிந்ததிலிருந்து 15 நாட்கள் ஒரு முறை தெளிக்கவும்.


நிலவக்கூடிய வானிலையின் காரணமாக மக்காச்சோளத்தில் அடிச்சாம்பல் நோய் ஏற்படக் கூடும். இதனை கட்டுப்படுத்த மேங்கோசெப் 1 கிலோ/எக்டர் என்றளவில் நடவு செய்த 20 நாட்களுக்கு பிறகு தெளிக்கவும்.



நிலவக்கூடிய வானிலையின் காரணமாக மல்லிகையில் இலைப்புள்ளி நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த இலைவழி தெளிப்பாக மேங்கோசெப் மருந்தினை 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் மாத இடைவெளியில் தெளிக்கவும்.


நிலவக்கூடிய வானிலையின் காரணமாக வெங்காயத்தில் கோழி கால் வேர் அழுகல் நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த நடவு செய்த வயல்களில் ட்ரைக்கோடெர்மா விரிடி-யை 2.5 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து போடவும். அல்லது நடவு செய்வதற்கு முன்பு விதைகளை திரம் அல்லது கேப்டன் கொண்டு 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்து நடவு செய்யவும்.

 

கால்நடை பராமரிப்பை பொறுத்தமட்டில், நாட்டுக் கோழிகளை ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்க்கும் போது ஆழ்கூளம் (கடலைப்பொட்டு, நெல் உமி) போன்றவை நனைந்து கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


ஆழ்கூளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டால் சுண்ணாம்புத் தூளை தூவி கிளறி விட வேண்டும். இதனால் ஆழ்கூளத்தின் ஈரப்பதம் குறைவதுடன், சுண்ணாம்புத் தூள் கிருமிநாசினியாகவும் செயல்பட்டு கோழிகளில் நோய் பரவுவதை தடுக்கிறது.

 


செம்மறி ஆடுகளில் அம்மை நோய் வராமல் தடுக்க ஜனவரி மாதத்தில் நோய் வர வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும்.


நாட்டுக் கோழிகளுக்கு புரதச் சத்துமிக்க அசோலாவை தீவனமாக அளிப்பதின் மூலம் விரைவான உடல் வளர்ச்சி அடைவதுடன் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203. 0427 242 2550, 90955 13102, 70109 00282.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு கேரட் அறுவடை செய்யும் இயந்திரம் செயல்விளக்கம்!!


PM Kisan FPO திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்கும் விண்ணப்பிப்பது எப்படி?


தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments