விவசாயிகளுக்கு கேரட் அறுவடை செய்யும் இயந்திரம் செயல்விளக்கம்!!



விவசாயிகளுக்கு கேரட் அறுவடை செய்யும் இயந்திரம் செயல்விளக்கம்!!


பொதுவாக கேரட் 60 -80 நாட்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வரும். ஒரு ஹெக்டரில் உள்ள கேரட்டை தோண்டி மற்றும் பிடுங்கி எடுக்க ஒரு மணி நேரத்திற்கு தோரயமாக 350 – 450 மனித ஆற்றல் தேவைப்படுகிறது. 


இது கேரட்டை விளைவிக்கும் விவசாயிகளுக்கு அதிக செலவு ஆகும். கேரட்டை குனிந்து கொண்டு அறுவடை செய்யும் பொழுது முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது மற்ற பணிகளுடன் ஒப்பிடும் பொழுது அதிக சிரமமானதாக உள்ளது. 



தொடர்ந்து கைகளை கொண்டு கேரட்டை பிடுங்கும் போது கைகளில் காயம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையம், கோயமுத்தூர், எஞ்சினால் இயங்கும் கேரட்டை அறுவடை செய்யும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. 


இந்த இயந்திரத்தின் முக்கிய அமைப்புகள் முறையே தோண்டும் அமைப்பு, கடத்தும் அமைப்பு, தாளை வெட்டும் அமைப்பு, சேகரிக்கும் அமைப்பு, முதன்மை சட்டம் மற்றும் எஞ்சினுடன் கூடிய ஆற்றல் பரிமாற்றும் அமைப்பு ஆகியவை ஆகும். தாளைவெட்டும் அமைப்பில் உள்ள வட்ட கத்தியானது கேரட் கிழங்கில் உள்ள தாளை வெட்ட பயன்படுகிறது.

 


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம், ஆராய்ச்சி மையம், நீலகிரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தென்னட்டி கிராமம், கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்தில் 30.12.2021 அன்று கேரட் அறுவடை செய்யும் இயந்திரத்தை கேரட் விளைவிக்கும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையம், கோயமுத்தூர் முதன்மை விஞ்ஞானி முனைவர் த.செந்தில்குமார் மற்றும் விஞ்ஞானி முனைவர் எஸ்.சையத் இம்ரான் ஆகியோர் எஞ்சினால் இயங்கும் கேரட் அறுவடை இயந்திரம் மற்றும் பவர் டீல்லரால் இயங்கும் கேரட் தோண்டும் இயந்திரம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்து, அதன் வேலை செய்யும் வீதம் மற்றும் பராமரிப்பு பற்றி எடுத்துரைத்தனர்.

 


இந்த செயல் விளக்கத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம், ஆராய்ச்சி மையம், விஞ்ஞானி முனைவர் வெ.கஸ்தூரி திலகம், தோட்டக்கலைஉ தவி இயக்குனர், அனிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர், ஜெயந்தி மற்றும் தோட்டக்கலை அலுவலர், சந்திரன் ஆகியோர் உடனிருந்தினர். இந்த செயல்விளக்கத்தில் 75 மேற்பட்ட கேரட் விளைவிக்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


மேலும் படிக்க....


Kisan Credit Card! கால்நடை வைத்திருப்போர் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!!


சிவப்பு முள்ளங்கி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி?


பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியத்தில் வேளாண் கருவிகள்! புதியத் திட்டம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments