குளிர் காலத்தில் கறவை மாடுகளின் பாதுகாப்பு மேலாண்மை குறிப்புகள்!!
மாடுகள் மற்ற பாலுட்டிகளை போலவே உடல் (வெப்பம் மாறா) சீரான குருதி வெப்ப நிலை கொண்ட விலங்குகளாகும். தமிழ்நாட்டில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி இறுதி வரை சுற்றுச்சூழல் வெப்பநிலையில் தீவிரமான மாறுபாடு காணப்படும் மற்றும் சில நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும்.
குளிர் காலத்தில் குறைந்த சுற்றுப்புற வெப்பநிலை, அதிக ஈரப்பதம் போன்ற காரணங்களால்
மாடுகள் குளிர் அயர்ச்சிக்கு உள்ளாகின்றன. இந்த பருவத்தில் மூன்று அம்சங்களில் அதிக
கவனம் தேவை, அதாவது முறையான தங்குமிட மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மாற்றியமைத்தல்,
ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் உடல் இருப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சரியான சுகாதார
பராமரிப்பு முறைகள் மூலம் குளிர் அயற்ச்சியை குறைக்கலாம்.
மாட்டுக்கொட்டகையில் காற்றின் வேகத்தை தடுக்க தளர்வான வீட்டுக்
கொட்டகைகளில் தார்பாலின், மற்றும் நெகிழிச் சாக்குகளால் ஆன திரைச்சீலைகள் தொங்கவிட
வேண்டும்.
கொட்டகையைச் சுற்றியுள்ள நிழல் தரும் மரங்களின் அடர்த்தியான
கிளைகளை வெட்ட வேண்டும், இது சூரிய ஒளி கொட்டகையில் ஊடுருவுவதை ஊக்குவிக்கும், இது
வெப்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புற ஊதா கதிர்களின் செயல்பாட்டின் மூலம் மாடுகளின்
கொட்டகையில் கிருமி நீக்கம் செய்யும்.
மேலும், திறந்த வெளிகளில் பகல் நேரத்தில் நேரடி சு+ரிய ஒளியில்
படுமாறு மாடுகளை மேய்க்க வேண்டும்.
மாடுகளின் கொட்டகைகள் மற்றும் அவற்றின் தளங்கள் அதிக நேரம்
ஈரமாகவும் குளிராகவும் இருக்கக்கூடாது. இது மாடுகளுக்கு, குறிப்பாக குட்டிகளில் நிமோனியா,
காய்ச்சல், காக்சிடியோசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் உயிரிழப்பை
ஏற்படுத்தக்கூடும்.
பெரிய, சிறிய மாடுகளுக்கு 4-6, 2 அங்குல (ஆழம்) வரை பொருத்தமான
படுக்கையை (நெல் வைக்கோல், காய்ந்த புல், கோதுமை பூசா, மரத்தூள், நெல் உமி) கான்கிரீட்
தரையில் வழங்கப்பட வேண்டும், ஏனெனில் குளிர் தரையுடன் மாடுகளின் நேரடி தொடர்பு மூலம்
அதிக உடல் வெப்ப இழப்புக்கு வழிவகுக்கும்.
கால்நடைக் கொட்டகையில் உள்ள படுக்கை வைக்கோல் உலர வைக்கப்பட
வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் மாற்றப்பட வேண்டும்.
குளிர்காலத்தில் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், அம்மோனியா
வாயுக்கள் குவிவதை தடுப்பதற்கும், கொட்டகைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சுத்தம்
செய்ய வேண்டும்.
மாடுகளை சுத்தமான துணி மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
குளிர்காலத்தில் மாடுகளின் முடிகளை வெட்டக்கூடாது மற்றும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவதை
தவிர்க்க வேண்டும்.
கடுமையான குளிர்ச்சியான சூழல் அதிக எரிசக்தி இழப்பை ஏற்படுத்துகிறது,
எனவே கூடுதல் கலோரி நிறைந்த தீவனம் கொடுத்து எரிசக்தி இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
குளிர்காலத்தில் மாடுகளுக்கு நல்ல சத்தான மற்றும் சீரான
உணவு வழங்கப்பட வேண்டும். அதிக புரதச் சத்து கொண்ட பயறு வகை பசுந்தீவனம் கொடுப்பதால்
பால் கறக்கின்ற மற்றும் வளரும் மாடுகளின் பால் உற்பத்தி அளவை எளிதாக ஆதரிக்கும்.
நீர் சத்து அதிகம் உள்ள பசுந்தீவனத்தை உலர் தீவனத்தோடு கலந்து
நறுக்கி கொடுப்பதால் தீவனம் எடுக்கும் அளவு அதிகமாக இருக்கும்.
உடல் வெப்பநிலையை பராமரிக்க 1.5-2.0 கிலோ அடர் கலவை போதுமானதாக
இருக்கும். மாடுகள் மற்றும் எருமைகளில் 10 லிட்டர் பால் உற்பத்தியைத் தக்கவைக்க 15
முதல் 20 கிலோ வரை நல்ல தரமான பசுந்தீவனம் போதுமானதாக இருக்கும்.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உலர் தீவனங்களை அதிகம்
கொடுப்பதால் செரிமானத்தின் போது அதிக வெப்பம் உற்பத்தியாகும். இது உடல் வெப்பத்தை சீராக
வைக்க உதவும்.
குளிர்காலத்தில் நைட்ரேட் நச்சுத்தன்மை மற்றும் வயிறு உப்பிசம்
ஏற்படுவதைத் தவிர்க்க, பருப்புத் தீவனத்தை பருப்பு அல்லாத கோதுமை தவுட்டுடன் கலக்க
வேண்டும்.
குளிர்காலத்தில் கால்நடைகளுக்கு சுத்தமான, புதிய, வெதுவெதுப்பான
நீரை நாள் ஒன்றுக்கு 4 முறை வழங்க வேண்டும்.
கால்நடைத் தீவனத்தில் சுமார் 17 சதவீத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை கொடுப்பதால் பாலில் உள்ள கொழுப்பின் சதவீதத்தை நிலைக்க உதவியாக இருக்கும். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய இதுவே சரியான நேரம்.
மாடுகளுக்கு கோமாரி நோய், சப்பை நோய், தொண்டை அடைப்பான்
(பிபிஆர், துள்ளுமாரி நோய், என்டோரோடாக்ஸீமியா, பிளாக் குவாட்டர்) போன்ற தடுப்பூசிகள்
போடப்படவில்லை என்றால், அதை குளிர்காலத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.
மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்படுவதைத் தடுக்க போதுமான கவனம் செலுத்துங்கள். இரவு நேரங்களில் கன்றுக்குட்டிகளுக்கு கதகதப்பான சூழல் உருவாக்க மின்விளக்குகளைக் கொட்டகைக்குள் தொங்கவிட வேண்டும். மேலும், உலர்ந்த சுத்தமான வைக்கோலை தரையில் பரப்புவதால் குளிரின் தாக்கத்தை குறைக்கலாம்.
மாடுகளுக்கு கொடுக்கூடிய அடர்தீவனமானது இரண்டு அல்லது மூன்று
வாரத்திற்கு தேவையானவை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சேமித்து
வைக்கும்பொழுது காற்றில் உள்ள ஈரப்பதம் தீவனத்தில் கலந்து பூஞ்சைகள் வளரக் காரணமாகி
கெட்டுப்போய்விடும். கொட்டகையின் தரை மிகவும் ஈரப்பதத்துடன் இருந்தால் சுண்ணாம்புத்தூளைத்
தூவி ஈரத்தை உறிஞ்ச செய்யலாம்.
தகவல் வெளியீடு
முனைவர் க.அருணாசலம் மற்றும் ரா.தினேஷ்குமார், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர்-6.
மேலும் படிக்க....
குளிர் காலங்களில் கோழி வளர்ப்பு – சில குறிப்புகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...