குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஆடு வளர்ப்பு! ஒரு சிறப்பு பார்வை!!



குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஆடு வளர்ப்பு! ஒரு சிறப்பு பார்வை!!


குளிர் மற்றும் மழைக்காலங்களில் கால்நடைகளை வளர்ப்பு என்பது சவால் நிறைந்ததாகும். தீவன மேலாண்மை முதல் நோய்த்தடுப்பு வரை அனைத்திலும் கால்நடை வளர்ப்போர் கவனம் செலுத்த வேண்டும்.

 

குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஆடு வளர்ப்பு


கொட்டகைப் பராமரிப்பும் மழைக் காலங்களில் முக்கியமானதாகும். கொட்டகையில் நீர் தேங்காமலும் எப்பொழுதும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியை அறவே ஒழிக்க வேண்டும். பூச்சிகளை ஓரளவு ஒழிக்க நாட்டுக் கோழிகளையும் கொட்டகையின் அருகில் வளர்க்கலாம்.

 


மழைக் காலங்களில் நீலநாக்கு நோய், துள்ளுமாரி நோய் மற்றும் புழுப்புண் நோய் போன்றவை செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை அதிகம் பாதிக்கும். 


நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க, மழைக்காலம் முன்னரே தடுப்பூசிகள் போடுவது நல்லது. நோய்களிலிருந்து ஆடுகளை காக்க தடுப்பூசி செலுத்தி உற்பத்தி நிலையை மேண்மை அடைய செய்வது முக்கியமான ஒன்றாகும். கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக நோய்த்தடுப்பு ஊசிகள் கால்நடைகளுக்கு போடப்படுகின்றன.

 

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆடுகளுக்கு மழைக்காலத்திற்கு முன்பும் மற்றும் மழைக்காலத்திற்கு பின்னரும் சரியான அளவு குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆடுகளின் சாணத்தை பரிசோதனை செய்து மழைக்காலத்திலும் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

 

அதிக எண்ணிக்கையில் ஒரே கொட்டகையில் ஆடுகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். கொட்டகை சுற்றுபுறத்தில் போதுமான தடுப்பு திரைகளை அமைத்து குளிரில் இருந்து காப்பாற்ற வேண்டும். 



தேவைப்பட்டால் வெப்பம் உண்டாக்கக்கூடிய மின் விளக்குகளை பொருத்தி செயற்கை முறையில் வெப்பத்தை உண்டாக்க வேண்டும். இதன் மூலம் குட்டி ஈன்ற ஆடுகளையும் மற்றும் குட்டிகளையும் குளிரிலிருந்து பாதுகாக்கலாம்.

 

நோய் பாதித்த ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கான சிகிச்சையை கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி செய்வது நல்லது. மழைக்காலத்தில் நோய்பாதித்த ஆடுகளிலிருந்து கிருமிகள் பரவாமல் தடுக்க கிருமி நாசினி கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை ஆடுகளுக்கு கொடுக்ககலாம்.

 

தீவன மேலாண்மை


மழைக் காலங்களில் போதிய அளவு தீவனம் இருப்பு வைத்திருத்தல் வேண்டும். ஆடுகள் உடல் வெப்பத்தை சீராக்க வேண்டியிருப்பதால் அதிக எரிசக்தி உள்ள தீவனங்கள் அளித்திட வேண்டும். அதிக எரிசக்தியை கொடுக்கவல்ல தானியங்களை தீவனத்தில் சேர்ப்பது அவசியம். அடர்தீவனக் கலவையின் அளவை மழைக்காலங்களில் அதிகரித்தல் வேண்டும். இது பெட்டை ஆடுகளில் சினை பிடிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கிறது.

 

மழைக்காலங்களில் ஆடுகளை நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள புற்களை மேய அனுமதிக்கக்கூடாது. மழைக்காலங்களில் மேய்ச்சல் இன்றி முழுவதும் தீவனத்தை நம்பியே இருக்க வேண்டும். 


இதற்காக போதுமான புல், அடர்தீவனம் அல்லது இதர விவசாய கழிவு பொருட்களை ஈரம் படாமல் பாதுகாத்து வைப்பது அவசியம். ஈரம் படும் தருவாயில் தீவனங்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு கால்நடைகளுக்கு உபாதைகளை ஏற்படுத்தும்.

 


நச்சு தாக்கிய தீவனங்களைப் பகுப்பாய்வு செய்திடல் வேண்டும். இந்த ஆய்வுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையோ அல்லது கால்நடை பராமரிப்புத்துறையின் ஆய்வகங்களையோ அணுகி தகுந்த வழிமுறைகளைப் பெற்று பயன் பெறலாம்.

 

பசுந்தீவனங்கள் மழைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும். பசுந்தீவனத்தை அதன் தன்மை மாறாமல் குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்போடு பதப்படுத்தும் முறைதான் ‘ஊறுகாய் புல் அல்லது ‘சைலேஜ் தயாரிப்பு முறையாகும்.

 

ஊறுகாய் புல் தயாரிப்பை காற்று புகாதவாறு சைலேஜ் பைகளிலோ அல்லது மண் குழிகளிலோ கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து பயன் பெறலாம். 


நல்ல தரமான ஊறுகாய் புல்லானது, பொன் மஞ்சள் நிறத்தில், கார அமிலத்தன்மை 3.5 முதல் 4.0 என்ற அளவை கொண்டு இருக்கும். இந்த ஊறுகாய் புல்லை வறட்சிக்காலங்களில் ஆடுகளுக்கு 1 கிலோ வரை கொடுக்கலாம்.

 


மேலும் விவரங்களுக்கு, முனைவர் அ.லட்சுமிகாந்தன், மருத்துவர் ம.க.விஜயசாரதி, உதவிப் பேராசிரியர்கள், முனைவர் ர.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு-614625, தஞ்சாவூர். தொடர்புக்கு : 04372-234012-4225.

 

மேலும் படிக்க....


குளிர் காலங்களில் கோழி வளர்ப்பு – சில குறிப்புகள்!!


தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய கனமழை வானிலை மையம் எச்சரிக்கை!!


பயிர்களில் எலிகளால் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் எளிய செயல் முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments