விவசாயிகள் நிதி உதவி திட்டம் பாரத பிரதமர் நாளை துவங்கி வைக்கிறார்!!


விவசாயிகள் நிதி உதவி திட்டம் பாரத பிரதமர் நாளை துவங்கி வைக்கிறார்!!


இந்திய நாட்டில் விவசாயிகளுக்கு நன்மை தரும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் 6,000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி தொகையானது ஒவ்வொரு வருடத்துக்கும் 3 தவணைகளாக வழங்கப்படும்.

 

அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும்.

 


பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது. இது 4 மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் கவுரவத் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், சுமார் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகை பங்கு மானியமாக விடுவிப்பார். இதன் மூலம் 1.24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.

 


இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் விவசாய உற்பத்தி அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்கிறார்.

 

அதேபோன்று பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கும் தவணை நிலைகளை தொடர்பாக அறிந்துகொள்ள கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

  • முதலில் PM Kisanயின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

  • பின் வலது புறத்தில் உள்ள விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்து அதில் பயனாளி நிலை (Beneficiary status) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.



  • இப்பொது புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தங்களின் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.


  • இறுதியாக தங்களின் தவணை நிலை பற்றிய முழுமையான தகவலை பெற முடியும்.

மேலும் படிக்க....


PM Kisan 10 வது தவணை E-KYC செய்யாவிட்டால் கிடையாது! மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!


விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக PM கிசான் திட்டத்தின் 10-வது தவணை புதிய தகவல்!!


பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா PMKSY: ரூ.93,068 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்டம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments