பயிர்களில் எலிகளால் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் எளிய செயல் முறைகள்!!



பயிர்களில் எலிகளால் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் எளிய செயல் முறைகள்!!


களை, வரப்பு ஓரம், திடல் களங்களின் ஓரங்களை சுத்தமாக வைக்க வேண்டும். வரப்பின் அகலத்தை குறைப்பதன் மூலம் எலி வளைகளையும், எலிகளையும் குறைக்கலாம். பட்டம் நடவை நெருக்கமாக நடவு செய்து எலிகளை கட்டுப்படுத்தலாம். எலிகள் எப்போதும் செங்குத்தாக தடுப்பின் ஓரத்திலேயே ஓடும் பழக்கம் உடையவை. rat problem control,


ஆகவே 8 அடிக்கு முக்கால் அடி பட்டம் விட்டு நடவு செய்யும் போது, பட்டத்தின் ஓரப்பகுதிகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். அவ்வாறு நடவு செய்யும் போது அடர்த்தி ஏற்பட்டு மேலும் பயிர்கள் செங்குத்தாக உள்ளதால் எலிகள் வயலுக்கு செல்வது தடைபடும். பட்டம் விட்ட பகுதியில் ஒரு பக்கம் சென்று மறுபக்கம் வெளியேறி விடும்.



வறுத்த கடலைப்பருப்புடன் சிறிதளவு சிமெண்ட் கலந்து எலி நடமாடும் குடோன்களில் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம் அல்லது கோதுமை மாவில் சுட்ட சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றை தேன் அல்லது வெல்லப்பாகில் முக்கி அதை சிமெண்ட் தோய்த்து வைக்க வேண்டும். 


லிகள் அதனை சாப்பிடும்போது சிமெண்ட் எலி வயிற்றுக்குள் சென்று சில மணி நேரத்தில் இறந்து விடும்.90 சதவிகிதம் எள்ளுப்பொடி அல்லது கடலை மாவுடன் 5 சதவிகித சர்க்கரைப்பாகும் 5 சதவிகித பியூஸ் போன பல்பு தூள் கலந்து எலி நடமாடும் இடத்தில் வைக்க வேண்டும். 



இவற்றை சாப்பிட்ட எலிகள் சில மணி நேரத்தில் இறந்து விடும். பருத்திப் பஞ்சை கைப்படாமல் சிறு சிறு திரியாக சுற்றி வெல்லப்பாகில் நனைத்து எலி நடமாடும் இடங்களில் போட வேண்டும். அவற்றைத் தின்ன எலிகள் நெஞ்சை அடைத்து இறந்து விடும்.


நெய்வேலி காட்டாமணக்கு செடியின் விதையை அரை கிலோ எடுத்து நன்றாக இடித்து 2 முதல் 3 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து சூடேற்றி வடிகட்டி கொள்ளவும்.


வடித்த திரவத்தில் சோள விதைகளை வேக வைத்து எலி நடமாடும் இடங்களில் வைக்க வேண்டும். இந்த சோள விதைகளை சாப்பிட்ட எலிகள் இறந்து விடும். எலி வளையில் மிளகு, திப்பிலி புகை மூட்டம் போட்டால் அந்த புகையினால் எலிகள் இறந்து விடும்.



சேமிப்புக் குடோனை சுற்றி கிளரிசிடியா செடியை நடவு செய்வதன் மூலம் எலி நடமாட்டத்தை தவிர்க்கலாம் அல்லது கிளரிசிடியா இலைகளை சேமிப்புக் குடோனைச் சுற்றி போட்டு காற்றுப்புகாமல் அறையை அடைத்து வைத்தால் செடியின் வாசைனக்கு எலிகள் வருவது இல்லை.

 

இத்தகவலை, இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்தார்.


மேலும் படிக்க....


விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை பெறுவீர்!!


லேசர் கருவி மூலம் நிலத்தை துல்லியமாக சமப்படுத்துதல் தொழில்நுட்பம்!!


நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments