பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!!

 


பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!!


கோடைகால உழவு


வயலை கோடைக்காலத்தில் இரண்டு (அ) மூன்று முறை ஆழ உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள நூற்புழுக்களின் முட்டைகள், வளர்ச்சியுறா மற்றும் வளர்ச்சியுற்ற நூற்புழுக்கள் மண் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தினால் அழிக்கப்படுகிறது. 


மேலும் இவ்வாறு ஆழ உழுவதன் மூலம் நூற்புழுக்களின் மீது ஏற்படுத்தப்படும் உராய்வு, காயங்கள் மூலமும் நூற்புழுக்கள் பாதிக்கப்படுகிறது.

 


பயிர் சுழற்சி


குறிப்பிட்ட நூற்புழுக்களால் பாதிக்கப்படும் பயிர்களை அந்நூற்புழு தாக்காத வேறு பயிர்களைக் கொண்டுபயிர் சுழற் சிசெய்வதன் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். 


இம்முறையில் நூற்புழுக்கள் இரைச்செடியின்றி பட்டினியாலும், பயிரைத் தாக்கக்கூடிய வீரியத்தை இழப்பதாலும், இலகுவாக மற்ற இதர உயிர்க்கொல்லி விழுங்கிகளால் அழிக்கப்படுவதாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.


நூற்புழுக்களை கவர்ந்திழுக்கும் பயிர்


இயற்கையாகவே நூற்புழுக்களுக்கு உகந்த பயிரான தட்டைப் பயிரை பயிர் சாகுபடிக்கு முன்பு விதைத்து மண்ணிலுள்ள நூற்புழுக்கள் அப்பயிரால் கவர்ந்திழுக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திற்குள் அதாவது நூற்புழுக்களின் வாழ்க்கை சரிதம், ஆயுள் காலம் முடிவதற்குள் அப்புறப்படுத்தலாம். 


அத்தகைய நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட பயிர்களை தீவனப் பயிர்களாக உபயோகிக்கலாம். சில பயிர்கள் உதாரணத்திற்கு சணப்பை பயிரை சாகுபடிக்கு முன்பு விதைப்பதன் மூலமும் நூற்புழுக்களை கவர்ந்திழுக்கலாம். 



ஆனால் இப்பயிர் நூற்புழுக்களை வளர விடுவதில்லை. ஆகையால் இப்பயிரை வளர்ந்த பிறகு நிலத்தினுள் மடக்கி உழுவதன் மூலம் பசுந்தாள் பயிராக உபயோகித்துக் கொள்ளலாம்.


நூற்புழுக்களை அழிக்கவல்ல பயிர்கள்


துளுக்க சாமந்தி, கடுகு போன்ற பயிர்கள் வேர்ப்பகுதியிலிருந்து வெளிப்படும் கசிவுப்பொருட்கள் நூற்புழுக்களை அழிக்கவல்லதாக உள்ளது. இத்தகைய பயிர்களை உதாரணத்திற்கு துளுக்க சாமந்தியை காய்கறி பயிர்களிலும், கடுகினை உருளைக்கிழங்கு பயிருடன் ஊடு பயிராக பயிர் செய்வதன் மூலம் நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.


பசுந்தாள் பயிர்கள்


கொளஞ்சி, சணப்பை, கிளைரிசிடியா போன்ற பயிர்களை சாகுபடிக்கு முன்பு தனிப்பயிராக வளர்த்து பிறகு மடக்கி உழுது விடலாம். அல்லது அத்தகைய பசுந்தாள் பயிர்களை சேகரித்து நிலத்தினுள் இடலாம். 


இம்முறையில் ஓரளவிற்கு பயிர்ச் சத்தும். மண்ணிலுள்ள அங்ககப் பொருட்களின் அளவும் அதிகரித்து நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத் தன்மையுடைய ஜீவராசிகள் பெருகி நூற்புழுக்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஏதுவாகிறது.

 


விதைப்பு நடவு செய்யும் காலத்தை மாற்றியமைத்தல்


இம்முறை மூலம் உருளைக்கிழங்கை பாதிக்கும் முட்டைக்கூடு நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம். மண்ணின் வெப்பநிலை குறைவாகவும் நூற்புழு பாதிப்பிற்கு உகந்த வகையில் இல்லாத காலத்தில் அதாவது அக்டோபர் மாதத்தில் உருளைக்கிழங்கை விதைப்பதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். 


பின்வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, நூற்புழு தாக்கினாலும் பயிர் மகசூலில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

 

தகவல் வெளியீடு  


முனைவர் த.செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் (பயிர் நூற்புழுவியல்), முனைவர் கோ.நெல்சன் நவமணி ராஜ், உதவிப் பேராசிரியர் (விதை நுட்பவியல்) மற்றும் முனைவர் வீ.மு. இந்துமதி இணைப் பேராசிரியர், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன் – 622 303. புதுக்கோட்டை மாவட்டம்.


மேலும் படிக்க....


பயிர்களில் எலிகளால் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் எளிய செயல் முறைகள்!!


விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை பெறுவீர்!!


கால்நடைகளில் ஏற்படும் நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை முறை தீர்வுகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments