நிலக்கடலையில் விதை நேர்த்தி மற்றும் ஊட்டச்சத்து நிர்வாகம்!!



நிலக்கடலையில் விதை நேர்த்தி மற்றும் ஊட்டச்சத்து நிர்வாகம்!!


மார்கழி பட்டத்தில் நிலக்கடலை (மணிலா) பயிரிட உகந்த பட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலக்கடலையை இப்பட்டத்தில் பயிரிட ALR3, DHARANI, CO3, COGn4, TMV3, TMV5, TMV7, TMVGn13, VRI2, VRI3, VRIGn5, VRIGn6 ஏற்ற இரகம் ஆகும். 


விவசாயிகள் பருவத்திற்கேற்ப நிலக்கடலை (மணிலா) இரகங்களை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்து அதிக இலாபம் பெற விதைப்பரிசோதனை அலுவலர் கேட்டுக்கொள்கிறார்.



விதை நேர்த்தி


ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரஸென்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்து பயிரிட்டால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான வேர் அழுகல் மற்றும் வாடல் நோயிலிருந்து நிலக்கடலையை (மணிலா) பாதுகாத்து அதிக விளைச்சல் பெறலாம். 


விதை நேர்த்தி செய்யாவிட்டால், ரைசோபியம் 10 பாக்கெட் (2000 கிராம்/எக்டர்) மற்றும் பாக்போபாக்டீரியா 10 பாக்கெட் (2000 கிராம்) உடன் 25 கிராம் தொழு உரம் மற்றும் 25 கிராம் மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் நடவு வயலில் இட வேண்டும்.


நுண்ணூட்ட சத்து அளித்தல்


நிலக்கடலை நுண்ணூட்டக் கலவையை (Groundnut Mn Mixture) எக்டேருக்கு 12.5 கி.கி என்ற அளவில் ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண் உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து நிழலில் உலர்த்தி வயலில் இடவும்). 



நிலக்கடலை நன்கு திரட்சியாக நல்ல எடையுடன் அறுவடை செய்ய நிலக்கடலை ரிச் இரு தெளிப்பாக 5 கிலோ கிராம் / 500 லிட்டர் தண்ணீரிலும், காய் முற்றும் தருவாயில் 5 கிலோ கிராம் / 500 லிட்டர் தண்ணீரிலும் கலந்து தெளிக்க வேண்டும்.

 

ஜிப்சம் இடுத்தல்


ஒரு எக்டேருக்கு 400 கிலோ வீதம் 40-45 வது நாளில் பாசனப் பயிருக்கும் 40-75வது நாளில் மானாவாரப் பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இட வேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். 


கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை இரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவைப்பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் சொறி போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

 


விதை மாதிரி அனுப்புதல்

 

தற்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக, விவசாயிகள் விதைப்பு செய்ய வைத்துள்ள குவியலிலிருந்து ஒரு கிலோ அளவு விதை எடுத்து விதைப்பரிசோதனை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், 


காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி ரூ.30/- கட்டணமாக செலுத்தி முளைப்பு திறன் மற்றும் ஈரப்பதத்தை பகுப்பாய்வு செய்து, தரமான விதைகளை பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டுமாறு விதைப்பரிசோதனை அலுவலர், பெ.ராஜகிரி, தெரிவித்தார்.


மேலும் படிக்க....


விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை பெறுவீர்!!


மக்காச்சோளம் வேர் உட்பூசணம் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் முறைகள்!!


மானாவாரி நிலக்கடலையில் தண்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments