மக்காச்சோளம்
வேர் உட்பூசணம் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் முறைகள்!!
மைக்கோரைசா என்பது பூசண வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆகும். மைக்கோரைசா என்ற சொல்லிற்கு வேர் பூசணம் என்பது பொருளாகும். வேர் பூசணமானது மண்ணின் சத்தை உறிஞ்சி அதிக அளவில் கொடுக்கக்கூடிய ஒரு நுண்ணுயிர் ஆகும்.
இந்த வேர் உட்பூசணத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு ஆதாரபூர்வமாக சோளம் அல்லது மக்காச்சோளம் தேவை. இவற்றை வளர்ப்பதற்கு வெர்மிகுலைட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.
வேர் உட்பூசணம்
உற்பத்தி செய்யும் முறை
- 6″x2″
x 2″ (நீ x அ x உ) என்ற அளவிற்கு குழி எடுத்து
அதன் மீது தொட்டி கட்ட வேண்டும் அல்லது குழியின் மீது கருப்பு பாலித்தீன் விரிவாக்க
வேண்டும்.
- ஒரு தொட்டியில் 300 கிலோ வெர்மிகுலைட்டை இட்டு 25 கிலோ அளவு (5%) வேர் உட்பூசண நுண்ணுயிர் உர தாய் வித்தை பரவலாக தூவி வெர்மிகுலைட்டுடன் கலக்க வேண்டும்.
- வெர்மிகுலைட்டின் மேற்பரப்பில் 10 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து 5 செ.மீ. இடைவெளியில் சுத்தம் செய்த சோளம் அல்லது மக்காச்சோளம் விதைகளை விதைக்க வேண்டும்.
- 20 கிராம் யூரியா,15 கிராம் சூப்பர், 15 கிராம் பொட்டாஷ் இவற்றை அடியுரமாகவும் பிறகு விதைத்த 30ஆம் நாளில் 15 கிராம் யூரியாவையும் இட வேண்டும். விதைத்த 70 நாளில் 3 கிராம் நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும்.
- விதைப்புக்கு பின்னர் இரண்டு குடம் தண்ணீரை பூவாளியில் தெளித்து, கோழிவலை கொண்டு குழியை மூட வேண்டும்.
- தினமும் தேவைக்கு ஏற்ப தண்ணீரை விட வேண்டும்.
- 20 நாட்களுக்கு பின்னர் வலையை எடுத்து விட வேண்டும்.
- 60 நாட்களுக்கு செடியை வளரவிட வேண்டும்.
- பின்னர் செடியின் தண்டுப்பகுதியை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும்.
- வேர் பகுதியை சிறு சிறு துண்டுகளாக்கி குழியில் உள்ள வெர்குலைட்டுடன் நன்கு கலக்க வேண்டும்.
- இவ்வாறு கலக்கப்பட்ட கலவையை, குழியிலிருந்து முழுவதுமாக எடுத்து உலர வைத்து பின்னர் பைகளில் நிரப்பிவிட வேண்டும்.
உபயோகப்படுத்தும்
முறைகள்
வேர் உட்பூசணங்கள்
கட்டாய கூட்டு வாழ்க்கை வாழ்வதால், சோளம் அல்லது மக்காச்சோளம் வேர்களில் வளர்ந்த வேர்
உட்பூசண இழைகள் மற்றும் வேர் உட்பூசண வித்துக்கள் கொண்ட வெர்மிக்குலைட் கலவை நுண்ணுயிர்
உரமாக வழங்கப்படுகிறது.
நாற்றாங்கால்
பயிர் விதை
விதைப்பதற்கு முன் நாற்றாங்காலில் சதுர மீட்டருக்கு 100-200 கிராம் என்ற அளவில்
2-3 செ.மீ. ஆழத்தில் இட்டு நன்கு பரப்பி விதை விதைக்க வேண்டும்.
நடவு வயல்
ஒரு ஏக்கர்
பயிருக்கு 10 கிலோ வேர் உட்பூசண நுண்ணுயிர் உரத்தை 1000 கிலோ இயற்கை உரத்துடன் கலந்து,
நன்கு உழுத நிலத்தில் இட்டு விதைக்கவும்.
பாலித்தீன்
பை நாற்றாங்கால்
10 கிலோ வேர்
உட்பூசண நுண்ணுயிர் உரத்தை 1000 கிலோ நாற்றாங்கால் மண் கலவையுடன் நன்கு கலந்து பாலித்தீன்
பைகளில் நிரப்பி குச்சிப் பதியன்கள் நட உபயோகிக்க வேண்டும்.
மரக்கன்றுகள்
நடவு
மரக்கன்றுகள்
நடவின்போது ஒரு நாற்றுக்கு 20-50 கிராம் அளவில் 5-10 கிலோ இயற்கை உரத்துடன் சேர்த்து
நடவுக் குழியில் இட்டு மரக்கன்றுகளை நட வேண்டும்.
வளர்ந்த மரங்கள்
மரம் ஒன்றுக்கு
50-200 கிராம் வேர் உட்பூசண நுண்ணுயிர் உரத்தை 10-25 கிலோ தொழு உரத்துடன் நன்கு கலந்து,
வளர்ந்த மரத்தின் வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.
தகவல் வெளியீடு
முனைவர்
த.செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் (பயிர் நூற்புழுவியல்), முனைவர் கோ.நெல்சன் நவமணி
ராஜ், உதவிப் பேராசிரியர் (விதை நுட்பவியல்), பி.கருப்பசாமி, திட்ட உதவியாளர் (தொழில்நுட்பம்)
மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி, இணைப் பேராசிரியர் (ம) திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை
அறிவியல் நிலையம், வம்பன் – 622 303. புதுக்கோட்டை மாவட்டம்.
மேலும் படிக்க....
மண்புழு உரம் தயாரித்து, ஆண்டுக்கு 5 லட்சம் பெண் விவசாயி அசத்தல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...