சம்பா பருவ நெற்பயிரில் நெற்பழ நோய் மேலாண்மை முறைகள்!!
தற்போது நிலவும்
வானிலை, கதிர் வெளிவரும் பருவம் மற்றும் பூக்கும் தருணத்தில் உள்ள நெல் பயிர்களில்
நெற்பழ நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு சாதகமாக இருப்பதால், நெல் வயல்களை முறையாக கண்காணித்து
உரிய காலத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அரிமளம் வட்டார
வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, நெற்பழ நோயானது ஒரு வகை பூஞ்சாணத்தால் உண்டாகிறது. இந்நோயானது “மஞ்சள் கரிப்பூட்டை நோய்” என்றும் ”இடைப்பழம்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நோய் அதிக மழை பெய்யும் ஆண்டுகளில் பரவலாகக் காணப்படுவதாலும்
அதிக மழைப்பொழிவின் காரணமாக அந்த ஆண்டுகளில் அதிக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள்
நம்புவதாலும், இந்நோய் ”லட்சுமி நோய்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நெற் கதிர்மணிகளும் ஆரம்பத்தில் பூஞ்சாணத்தின் வித்துக்களால் நிரம்பி பளபளப்பான மஞ்சள் நிற நெற்பழ உருண்டைகளாக மாறும். பூஞ்சாண வளர்ச்சி தீவிரமாகும்போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறி, கடைசியாக கரும்பச்சை நிற நெற்பழ உருண்டைகளாக காணப்படும்.
முதலில் இந்த உருண்டைகள் சிறியதாக தோன்றி, பிறகு பெரியதாகும். ஒரு கதிரில் ஒருசில மணிகள் மட்டுமே பாதிக்கப்படும். இந்நோயினால் நெல் மணிகளின் தரம் குறைந்து விடும். குறைந்த வெப்பநிலை, 90 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம், இரவு நேரப் பனி ஆகியவை இந்நோய் பரவலுக்கு ஏற்ற காலநிலையாகும்.
கதிர் வெளிவரும் பருவம் மற்றும்
பூக்கும் தருணத்தில் நிலவும் மந்தமான வானிலை இந்நோய் தீவிரமாவதற்கு காரணமாக அமைகின்றது.
வேகமாக காற்று வீசும்போது நோய் பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து பூஞ்சாண வித்துக்கள் மற்ற
பயிர்களுக்கு எளிதாக பரவும். இந்நோய் பாதிப்புக்குள்ளான விதை காற்று, நீர் மூலமாக பரவுகிறது.
நெற்பழ நோய்
மேலாண்மை முறைகள்
வயல் வரப்புகள், பாசன வாய்க்கால்களை களை அகற்றி சுத்தமாக பராமரிக்கவும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழைச்சத்து உரங்களை 3 முதல் 4 தவணைகளாக பிரித்தளிக்கவும். கதிர் இலை மற்றும் பால் பிடிக்கும் பருவங்களில் உள்ள நெற்பயிர்கள் மழையில் நனைந்து ஈரமாக இருக்கும்போது வயலில் சாகுபடி பணிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
குளிர்ப்பருவத்தில் நெல் வயலில் நோய் தாக்கத்தை முறையாகக்
கண்காணிப்பது மிகவும் அவசியம். நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்க
கலப்பு கதிர் வெளிவரும் போது ஒருமுறையும் மற்றும் பால் பிடிக்கும் தருவாயில் ஒருமுறையும்,
ஒரு ஏக்கர்க்கு புரோபிகோனசோல் 25% இ.சி 200 மில்லி (10 மில்லி/10 லிட்டர் நீர் என்றளவில்
200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானை பயன்படுத்தி மாலை வேளையில் தெளித்து வருமுன்
தடுக்கலாம்.
மேலும் படிக்க....
டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...