காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை அமைக்க அரசு மானியம்!!
அரும்பாடுபட்டு விளைவித்தக் காய்கறிகளை தரம்பிரித்துப் பாதுகாப்பது என்பது மிக மிக அவசியம். இதற்கு, காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை தேவை என்பதால், அதனை அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாக்க இடவசதி
காய்கறி பயிரிடும்
விவசாயிகள், அறுவடை செய்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லும் முன், தரம் பிரிக்கவும்,
தரம் பிரித்த காய்களை சிப்பம் கட்டவும், சந்தைக்கு கொண்டு செல்லும் வரை வெயில், மழையில்
இருந்து பாதுகாக்கவும் இட வசதி தேவைப்படுகிறது. இதற்காக, தோட்டக்கலை துறை மூலம் சிப்பம்
கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
சிப்பம் கட்டும்
அறை
சிப்பம் கட்டும்
அறை என்பது, 2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை
தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன்
அமைக்கவேண்டும்.
அரசு மானியம்
இதுகுறித்து
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு
தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை தரம்பிரித்து சிப்பம்
கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
திட்டத்தின் அம்சங்கள்
இந்தத் திட்டத்தின்
கீழ் சிப்பம் கட்டும் அறை 600 சதுர அடியில் அமைக்க வேண்டும். 2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை
தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை
எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்
- விவசாயிகள் சிட்டா
- அடங்கல்
- நில வரைபடம்
- ஆதார் அட்டை
- ரேசன் அட்டை
- வங்கி கணக்கு புத்தகநகல்
- புகைப்படம்
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
இந்தத் திட்டத்தின்படி
மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் மேலேக் கூறியுள்ள ஆவணங்களுடன் பல்லடம் தோட்டக்கலை
துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் ரூ. 2 லட்சம் வரை கடன்- கால்நடைத்துறை தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...