விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை பெறுவீர்!!

 


விதைகளில் பிற ரக சோதனை செய்வீர்! கலப்பினம் இல்லாத விதைகளை!!


தரமான விதை உற்பத்தியில் கலவன்களை உரிய நேரத்தில் தகுந்த முறையில் நீக்கினால் மட்டும் விதைத்தரத்தைப் பேணிக் காக்க முடியும். நமது மாநிலத்தில் நெல் சான்று விதைகள் உற்பத்தி அதிகமாக செய்யப்படுவதால் கலவன்கள் வயலில் ஏற்படாமல் இருக்க சில நடைமுறைகளை கடைபிடிக்கலாம்.

 

1) சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களிலிருந்து மட்டுமே வாங்கிப் பயன்படுத்துதல் வேண்டும்.


2) அதிகளவில் விதை நெல் வாங்கும் போது அனைத்து மூட்டைகளும் ஒரே ரகமாக உள்ளனவா எனக் கவனித்து வாங்க வேண்டும்.



3) இரண்டு அல்லது அதற்கு மேல் இரகங்கள் வாங்கும் போது அவைகளைத் தனித்தனியே வைத்துப் பயன்படுத்துதல் வேண்டும்.


4) நாற்று விடுவதற்கு தயார் செய்யும் போது இரகங்கள் கலந்து விடாமலிருக்க வெவ்வேறு தினங்கள் மற்றும் இடங்களில் நாற்று விட்டு நாற்று நடவின்போது வெவ்வேறு தினங்களில் நாற்றுப் பறித்தல் மற்றும் நடுதல் மேற்கொள்ள வேண்டும்.


5) நடவு முடிந்து மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்துதல் நல்லது.


6) இரகங்களைத் தனித்தனியே அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் காயவைத்தல் வேண்டும்.


7) கதிரடிக்கப்படும் இடத்தினை முழுமையாக சுத்தம் செய்து அதன்பின் கதிரடித்தல், காயவைத்தல் பணிகளைச் செய்யவேண்டும்.


8) நன்கு காய வைத்த விதைகளை புதிய கோணிகளில் மட்டுமே சேமித்து வைத்தல் வேண்டும்.



9) மூட்டைகளின் மேல் இரகத்தினை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.


10) பல இரகங்கள் உள்ள நிலையில் மூட்டைகளை இரக வாரியாக தனி அறையில் வைத்தல் அவசியம்.


இவ்வாறு பத்து கட்டளைகள் கடைபிடிப்பதால் வயலில் கலவன்கள் ஏற்படாது பார்த்துக் கொள்ளலாம்.

 

தூத்துக்குடி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் நீங்கள் உற்பத்தி செய்யும் விதைகளில் பிற ரக விதைகள் கலந்துள்ளனவா என்பதை மைக்ராஸ்கோப் கண்காணித்து, இரகத்தின் குணநலன்களை கருத்தில் கொண்டு பிரித்து அறியப்படுகிறது. 


அதாவது சான்று நெல் விதையில் பிற ரக விதைகள் இரண்டாயிரம் விதைகளுக்கு நான்கு விதைகள் மட்டுமே இருக்கலாம். ஆதார விதைகளில் பிற ரக விதைகள் இரண்டாயிரம் விதைகளுக்கு ஒரு விதை மட்டுமே இருக்க வேண்டும்.

 


எனவே, பிற ரக விதைப்பரிசோதனை மூலம் கலப்பில்லாத விதைகளைப் பயன்படுத்தி உயர் மகசூல் அடையுமாறு தூத்துக்குடி, விதைப்பரிசோதனை அலுவலக மூத்த வேளாண் அலுவலர், இரா.மோகன் கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க....


விலை மதிப்புமிக்க தேக்கு மரம் வளர்ப்பு! சாகுபடி பற்றிய முழு தொகுப்பு!!


மக்காச்சோளம் வேர் உட்பூசணம் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் முறைகள்!!


டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments