மக்காசோளம்
அறுவடை உத்திகள் மற்றும் விற்பனை குறித்த தகவல்!!
விருதுநகர்
மாவட்டம், ம.ரெட்டியாபட்டி வட்டாரத்தில் உள்ள இறைசின்னம்பட்டி கிராமத்தில் நேற்று ரிலையன்ஸ்
அறக்கட்டளை சார்பில் 30.12.2021 அன்று மக்கா சோள அறுவடை உத்திகள் மற்றும் விற்பனை செய்வது
குறித்து விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகிருபா தலைமை தாங்கி பேசுகையில் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும்
பணிகள், விவசாயம் மற்றும் கால்நடை சம்மந்தப்பட்ட அனைத்து தகவல் உடனுக்குடன் விவசாயிகளுக்கு
வாட்சாப் மற்றும் அலைபேசி வாயிலாக குருந்தகவல் அனுப்படுகிறது என்றார். வேளாண் தொழில்நுட்ப
வல்லுனர் சந்திர சேகரன் கூறுகையில், மக்காசோளம் அறுவடை சம்மந்தப்பட்ட தகவல்களை விபரமாக
கூறினார்.
மக்காசோள கதிரில்
உள்ள மணிகள் கடித்து பார்த்தால் கடினமாக இருக்க வேண்டும். ஈரப்பதம் 11 சதவீதமாக இருக்குமாறு
பாரத்து அறுவடை செய்ய வேண்டும் என்றார். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கான தகவல் மையம்
மக்காசோள விலைக்கான முன்னறிப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் வரும் ஜனவரி
22 முதல் குவிண்டாலுக்கு 1700 முதல் 1800 வரை கிடைக்கும் என்றார்,
விவசாயிகளின்
பல்வேறு வகையான சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கட்டணமில்லாத அலைபேசி எண்
1800 419 8800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சின்னராஜ்,
சோலைராஜ், முத்துராஜ், தங்கம் செய்திருந்தனர்.
திருப்பூர்
மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., நான்காம் மண்டல
பாசனத்துக்கு 40,000 ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. தொடர்
மழையால் அறுவடை பணிகள் குறித்த நேரத்தில் துவங்கவில்லை. மழை இடைவெளி விட்டதும் தற்போது
அறுவடை தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து
மக்காச்சோளத்தை காய வைத்து விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் உடுமலை ஒழுங்கு முறை
விற்பனை கூடத்துக்கு வரத்து அதிகரித்துள்ளது. வளாகத்திலுள்ள உலர் களங்களில் சுற்றுப்பகுதியைச்
சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி
மக்காச்சோளம் 100 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.1,690 வரை விலை கிடைத்தது. படைப்புழு தாக்குதல்
உட்பட நோய்த்தாக்குதல்களால் மகசூல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் விலையும் குறைந்துள்ளது
விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எனவே நடப்பு
சீசனில் மக்காச்சோளம் அதிகளவு இருப்பு செய்யப்படும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப ஒழுங்கு
முறை விற்பனைக்கூடங்களில் குடோன்களும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க....
மானாவாரி நிலக்கடலையில் தண்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் முறைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...