பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த வேளாண்மை இயக்குநர் ஆலோசனை!!
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் திரவ பொட்டாஷ் உயிர் உரத்தினை பயன்படுத்தி தற்போது விலை உயர்ந்துள்ள பொட்டாஷ் உரச்செலவை குறைக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பயிர் வளச்சிக்கு தேவையான முதன்மை சத்துக்களில் சாம்பல் சத்து (பொட்டாசியம்) இன்றியமையாதது. பயிருக்கு பூச்சி நோய் எதிர்ப்பு திறனையும், நெல் மணிகளின் எடையினை அதிகரிப்பதிலும் பொட்டாஷ் பெரும் பங்கு வகிக்கிறது.
மழை வெள்ளத்தினால் பயிர் சாயாமல் திடமாக நிற்பதற்கும் மற்றும் வறட்சியை தாங்குவதற்கும் பொட்டாஷ் சத்து பெருமளவு உதவுகிறது. நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகளவில் இருந்தூலும் 2 சதவீதம் சாம்பல் சத்து மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளது.
மண்ணில் கட்டுண்டு கிடக்கும் சாம்பல் சத்தினை மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பல்வேறு செயல் திறன்களால் அமிலத்தை உற்பத்தி செய்து, நீரில் கரையும் சாம்பல் சத்தாக மாற்றி பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
உயிர் உரங்கள் உற்பத்தி மையங்களில் பொட்டாஷ் பாக்டீரியா (பிரட்டூரியா ஆராண்டியா) நுண்ணுயிரியை கொதிகலன்களில் வளர்த்து பாக்டீரியா செல்களை மட்டும் திரவ ஊடகத்திலிருந்து நவீன தொழில்நுட்பம் கொண்டு தனியே பிரித்தெடுத்து, பின் நுண்ணுயிரி செல்களை ஒரு ஆண்டு வரை வாழ்நாள் திறன் குறையாமல் வைக்கும் ஒரு சிறப்பு ஊடகத்தில் மீண்டும் கலந்து பிளாஸ்டிக் கொள்கலன்களில் நிரப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கடந்த ஆண்டு
முதல் பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பொட்டாஷ் பாக்டீரியாக்கள், மண்ணின் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸிலிருந்து 42 டிகிரி செல்சியஸ் வரை நன்கு வளரக்கூடியது. இந்த நுண்ணுயிரியானது, மண்ணில் அதிகளவு உப்பு மற்றும் அதிக உவர் தன்மை இருந்தாலும் தாங்கி வளரக் கூடிய தன்மைக் கொண்டது.
இந்த நுண்ணுயிரி, பயிரின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. பயிர்களில் வளர்ச்சியூக்கிகள் உற்பத்தி செய்து பயிர்கள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. இதனால் மகசூல் 10-25 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும், இதை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கும், மண்ணுக்கும் எவ்வித தீங்கும் இல்லை. இந்த பொட்டாஷ் பாக்டீரியா புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பொட்டாஷ் பாக்டீரியா திரவ வடிவில் (500 மி.லி.) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ரசாயன பொட்டாஷ் உரத்தின் விலை உயர்ந்துள்ளதால்,
இந்த பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்ததுவதால் ரசாயன பொட்டாஷ் உரத்தினை
20-30 சதவீதம் வரை குறைத்து பயன்படுத்தினாலே போதுமானதாகும்.
எனவே, புதுக்கோட்டை
மாவட்ட விவசாயிகள் திரவ பொட்டஷ் உயிர் உரத்தினை பயன்படுத்துவதன் மூலம் பொட்டாஷ் உரச்
செலவை விவசாயிகள் குறைக்கலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார்
ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...