Kisan Credit Card! கால்நடை வைத்திருப்போர் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!!




Kisan Credit Card! கால்நடை வைத்திருப்போர் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!!


கால்நடை விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட தேசிய பிரச்சாரத்தில், 2021 டிசம்பர் 17 வரை 50,454 கிசான் கிரெடிட் கார்டுகள் அதாவது (KCC) வழங்கப்பட்டுள்ளன. 15 பிப்ரவரி 2022 வரை நடைபெற உள்ள, இந்த பிரச்சாரம் 15 நவம்பர் 2021 முதல் தொடங்கப்பட்டது.

 

நாடு முழுவதும் இது AHDF-KCCபிரச்சாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. AHDF என்பது (Animal Husbandry and Diarying Farmers) அதாவது இது, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை வைத்திருப்பவர்களை குறிக்கிறது. இதன் கீழ், ஒவ்வொரு வாரமும் மாவட்ட அளவில் கே.சி.சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த இடத்திலேயே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அரசின் தகவல் தெரிவிக்கின்றன.

 


இதற்கு முன்பும், கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு சலுகைக் கடன் வழங்குவதற்காக ஜூன் 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை சிறப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதன் கீழ், 14.25 லட்சம் புதிய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.

 

AHDF KCC பிரச்சாரத்தின் மூலம், பால் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய மற்றும் தகுதியுடைய அனைத்து பால் பண்ணையாளர்களும், மேலும் முன்பு பயன் பெறாதவர்கள் காப்பீடு செய்யப்படுவார்கள்.

 

அரசு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்

 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்றால், கால்நடை வளர்ப்பின்றி இந்தக் கனவு நனவாகாது என்பது அரசுக்குத் தெரியும். அதனால்தான் இப்போது அரசு, கால்நடை வளர்ப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

 


KCC இன் பலன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, முன்பு இந்த வசதி விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. உங்கள் கிராமத்திலும் முகாம் இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்கவும்.


விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைக்கவில்லை


8 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் கால்நடை துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு 8.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 198.48 மில்லியன் டன் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

இருப்பினும், உலகின் பெரும்பாலான பால் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பால் கறக்கும் விலங்குகளின் உற்பத்தித்திறன் சற்று குறைவாகவே காணப்படுகிறது. குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

 


பசு கிசான் கிரெடிட் கார்டு


சில மாநில அரசுகளும் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதில் ஹரியானா மாநிலமும் ஒன்றாகும். இங்கு அரசு பசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மாநிலத்தைச் சேர்ந்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.800 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 


ஹரியானாவைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் கால்நடை விவசாயிகள் வங்கிகளில் பிகேசிசிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 1.25 லட்சம் பேருக்கு கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில், இதுவரை 16 லட்சம் குடும்பங்களுடன் 36 லட்சம் கறவை விலங்குகள் பதிவாகியுள்ளன.

 


பசு, எருமை வளர்க்க எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்?


பசு கிசான் கிரெடிட் கார்டு தயாரிப்பதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்க கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பசு, எருமை, செம்மறி ஆடு, கோழி வளர்ப்புக்கு, 4 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. ஒரு மாட்டுக்கு ரூ.40783, எருமைக்கு ரூ.60249 கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியத்தில் வேளாண் கருவிகள்! புதியத் திட்டம்!!


PM Kisan 10 வது தவணை E-KYC செய்யாவிட்டால் கிடையாது! மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!


3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் ரூ. 2 லட்சம் வரை கடன்- கால்நடைத்துறை தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments