PM Kisan FPO திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்கும் விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய அரசு,
மக்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது,
விவசாயிகள் முதல் விவசாயம் செய்யாத சாதரண மக்கள் வரை அனைவரும் பயன் பெறுகிறார்கள்.
அரசு PM
Kisan FPO திட்டத்தை அறிமுகப்படுத்தியதின் நோக்கம், விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு
ரூ.15 லட்சம் வரை உதவி வழங்க மட்டுமே. அதாவது, விவசாயத் தொழில் தொடங்குவதற்கு நாட்டிலுள்ள
விவசாயிகள் ரூ.15 லட்சம் வரை அரசிடம் இருந்து உதவி பெறலாம்.
இது ஒரு நிதி
உதவித் திட்டமாகும், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய, 11 விவசாயிகள் ஒரு அமைப்பாகவோ அல்லது
ஒரு நிறுவனத்தையோ தொடங்கி இருக்க வேண்டும்.
இந்த நிறுவனத்தையோ
அல்லது அமைப்பையோ அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவி கிடைக்கும்.
அந்த பணத்தைக் கொண்டு, அவர்கள் விவசாயம் தொடர்பான பொருட்களை வாங்கலாம். இந்த திட்டத்தில்
எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த படிப்படியான செயல்முறையை கீழே படித்து அறிந்திடுங்கள்.
இதோ விண்ணப்பிக்கும்
முறை
படி 1
முதலில், நீங்கள்
தேசிய வேளாண் சந்தையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும், அங்கே, நீங்கள்
PM Kisan FPO யோஜனாவில் இருந்து பயனடைந்திடலாம்.
படி 2
உங்கள் முன்
ஒரு பக்கம் திறந்திருக்கும். இங்கே நீங்கள் முகப்பு பக்கத்தில் FPO என்ற விருப்பத்தை
கிளிக் செய்ய வேண்டும்.
படி 3
அதன் பிறகு,
உங்கள் முன் தோன்றும் பதிவு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் இங்கே உள்ள
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தேவையான தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்ததாக,
படி 4
இப்போது உங்கள்
வங்கிக் கணக்கு மற்றும் அடையாள அட்டை(அதாவது அதார் அட்டை எண், வாக்காளர் பட்டியல் எண்),
ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது பாஸ்புக்கை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 5
இதுவே கடைசி
படி அனைத்து தகவல்களையும் கவனமாக சரிபார்ப்பது அவசியமாகும், பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
வேண்டும்.
மேலும் படிக்க....
பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியத்தில் வேளாண் கருவிகள்! புதியத் திட்டம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...