ஒரு நாளில்
2 லிட்டர் வரை பால் கறக்கும் ஜாலவாடி ஆடு தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம்!!
பாலிற்காகவும்
இறைச்சிக்காகவும், நார் உற்பத்திக்காகவும் பயன்படும் நடுத்தரத்திற்கும் மேலான இந்த
ஜாலவாடி வெள்ளாட்டினத்தின் பூர்வீகம் குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர மற்றும் ராஜ்கோட்
மண்டலப் பகுதியாகும்.
தாரா பக்காரி (Tara Bakari) என்று அங்குள்ள பகுதி மக்களால் அழைக்கப்படுகிற இவ்வின வெள்ளாடுகள் குஜராத் மாநிலத்திலேயே அதிகப்படியாக வளர்க்கப்படுகின்ற வெள்ளாட்டினம் ஆகும். ராபரீஸ் (Rabaris) மற்றும் பார்வாட்ஸ் (Bharwads) என்றழைக்கப்படுகின்ற, பாரம்பரியமாக மேய்ப்பவர் இனத்தைச் சேர்ந்த மக்களால் இவ்வினம் வளர்க்கப்படுகிறது.
ஒரே சீராக இல்லாத மழை மற்றும்
குறைவான மழையுள்ள பாதியளவு வறண்ட உலர்ந்த பகுதியான சௌராஷ்ட்ரா மண்டலத்தில் அதிகமாக
இவ்வினம் வளர்க்கப்படுகிறது.
சுரேந்திரநகர்
என தற்போது அழைக்கப்படுகிற மண்டலம் முன்காலத்தில் ஜாலாவத் என்று அழைக்கப்பட்டது. இதன்
ஒரு பகுதி ராஜ்கோட் மாவட்டத்திலும் இந்த ஜாலாவத் பகுதி இருந்திருக்கிறது. 27.8 சதவிகித
ஜாலாவத் வெள்ளாட்டின வகைகள் சுரேந்திர நகர் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது.
15, 20 என்று
சிறிய சிறய பட்டிகளாகவும் 700, 800 என்று எண்ணிக்கை கொண்ட பட்டிகளாகவும் வளர்க்கின்றனர்.
பரந்த விரிந்து கிடக்கும் மேய்ச்சல் தளங்களிலேயே பட்டிகளை அமைக்கின்றனர். இவ்வின வெள்ளாடுகள்
நல்ல கருமை நிறைந்த நல்ல வளவளப்பான, ஒளிரும் முடிகளைக் கொண்டிருக்கின்றது. சில ஆடுகள்
மட்டும் வெண்மை கலந்த தோலினைக் கொண்டிருக்கின்றது.
நடுத்தர உடல்வாகும் அதற்கும் அதிகமான சற்று பெரிய உருவத்தினைக் கொண்ட இவ்வகை ஆடுகள் பாலிக்காகவும், இறைச்சிக்காகவும், நாருக்காகவும் பயன்படுகின்றன. இருபால் ஆடுகளும் முறுக்கிய கார்க்கஸ்குரு போன்ற தோற்றமளிக்கும் கொம்புகளைக் கொண்டிருக்கின்றது.
அவை மேல் நோக்கி வளர்ந்து பின்னோக்கி கூறிய முனைகளைக்
கொண்டுள்ளது. சற்று நீளமான காதுகள் வெண் நிறப்புள்ளிகளுடன் கீழ் நோக்கித் தொங்கிய வண்ணம்
இருக்கின்றது.
மேய்சசலுக்குப் போகும்போது காயம்பட்டு கிழிந்து விடக் கூடாது என்பதற்காகவே தொங்கிக் கொண்டுள்ள காதுகளை மேய்ப்பவர்களே வெட்டி அழ கூட்டவோ அல்லது கிழித்து விடவோ செய்கின்றனர். இவ்வகை ஆடுகள் பால் அதிகளவு இருக்கின்ற காரணத்தால் மடி சற்று பெரியளவில் இருப்பதோடு கூம்பு வடிவிலான காம்புகள் நன்கு நீண்டு காணப்படுகிறது.
ஒரு நாளில் சற்றேறத்தாழ 1.5 முதல் 2 லிட்டர்
வரை பால் கறக்கும் திறனும் பெற்றிருக்கின்றது. கிடா சராசரியாக 39 கிலோவும் பெட்டை
33 கிலோ எடையும் கொண்டிருக்கின்றது. பெட்டை 763 செமீ கிடா 85 செமீ உயரம் உடையதாக இருக்கிறது.
பிறந்த குட்டிகள் பெட்டையாக இருப்பின் 2.85 கிலோவும் கிடாவாக இருப்பின் 3.08 கிலோவும்
எடை கொண்டிருக்கின்றது.
நோய் எதிர்ப்பாற்றல்
மிக்க இவ்வகை ஆடுகள் 2008 கால்நடை கணக்கெடுப்பின்படி 2,60,000 மற்றும் 2013 ஆண்டு கணக்கெடுப்பின்படி
3,90,800ம் இருக்கிறது.
தகவல் வெளியீடு
டாக்டர் கே.வி.கோவிந்தராஜ், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, கவுந்தப்பாடி 638 455, ஈரோடு.
தொடர்புக்கு:
98427 04504.
மேலும் படிக்க....
குளிர் காலங்களில் கோழி வளர்ப்பு – சில குறிப்புகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...