குண்டு மிளகாயில் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி?

 


இராமநாதபுரம் மாவட்டத்தில் முண்டு மிளகாயானது மானாவாரியாக மாவட்டம் முழுவதும் பரவலாகப் பயிடப்பட்டுள்ளது. நைனார்கோவில் வட்டாரப் பகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை மற்றும் மும்முடிச்சாத்தான் கிராமத்தில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) முனைவர் கு.இளஞ்செழியன், மிளகாய் பயிரில் பூச்சி மற்றும் நோய் பற்றிய வயல்வெளி ஆய்வு நடத்தினார். தற்பொழுது, மிளகாய் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோயின் தாக்குதலானது ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.

 

சாதகமான சூழ்நிலை மற்றும் நோய் பரவும் முறைகள்


  • சூடான மற்றும் ஈரமான வானிலை

  • வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸ்

  • அதிக ஈரப்பதம்

 


மிளகாய் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோய்


பின் கருகல் நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் பூக்கள் மற்றும் இலைகளின் நுனிப்பகுதியானது பின்னோக்கி கருக ஆரம்பிக்கும். செடியில் ஒரு சில கிளையோ அல்லது செடி முழுமையாகவோ பின்னோக்கி கருகிக் காணப்படும். 


பழ அழுகல் நோயானது முதிர்ந்த பழங்களில் மட்டுமே காணப்படும். புள்ளிகள் பெரும்பாலும் வட்ட வடிவில் குழிந்து கருமை நிற ஓரங்களைக் கொண்டிருக்கும். குழிந்த புள்ளிகளானது இளம் சிவப்பு வண்ண பூஞ்சாணத்தின் வித்துக்களால் சூழப்பட்டிருக்கும். 


நோய் தீவிரமடையும் பொழுது, இப்புள்ளிகளானது மேலும் பரவி பெரியதாக அடா்ந்த திட்டுகளாக மாற்றம் பெறுகின்றன. பழங்கள் முதிர்வதற்கு முன்பே உதிர்ந்து விடுகின்றன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுவதோடு மிளகாயின் தரமும் குறைகின்றது.

 

மேலாண்மை முறைகள்


நோய் தாக்கிய கிளைகளையும், பழங்களையும் செடியில் இருந்து அகற்றி எரித்து விட வேண்டும்.



மிளகாய் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோயின் அறிகுறி தென்பட்டவுடன் காப்பா் ஆக்ஸி குளோரைடு (50 WP) 2.5 கிராம் அல்லது மேங்கோசெப் (75 WP ) 2 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் கைத்தெளிப்பான் கொண்டு மூன்று முறை தெளிக்க வேண்டும்.

 

பூச்சி மருந்து 


  • ஒரு ஏக்கருக்கு (200 லிட்டர் தண்ணீர்) 

     

  • கைத்தெளிப்பான் (10 லிட்டர் தண்ணீர்)                

  • விசைத்தெளிப்பான் (10 லிட்டர் தண்ணீர்)       

 

காப்பா் ஆக்ஸி குளோரைடு (50 WP) 500 கிராம் 25 கிராம் 83 கிராம்

மேங்கோசெப் (75 WP) 400 கிராம் 20 கிராம் 67 கிராம்

 

குறிப்பு


கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது ஒரு எக்டேருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 



அதே போல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 150 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தின் திறனை அதிகப்படுத்த மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு 500 மிலி என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு முனைவர் கு.இளஞ்செழியன், தொழில்நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) மற்றும் முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க....


சிவப்பு முள்ளங்கி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி?


உறைபனியில் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு வேளாண் விஞானிகளின் அறிவுரைகள்!!


PM Kisan FPO திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்கும் விண்ணப்பிப்பது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments