பந்து போன்ற
கரிப்பூட்டை நெற்பழ நோய் கட்டுப்படுத்தும் முறைகள்!!
சிவகங்கை மாவட்டம்,
மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, வட்டார விவசாயிகளுக்கு நெற்பழ
நோய் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தார்.
இது குறித்து
அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில், தற்போது நிலவி வரும் தட்ப வெப்ப நிலை நெற்பழநோய்
ஏற்பட காரணமாகிறது. நெல்லில் ஏற்படக்கூடிய நெற்பழ நோய் (False smut) உஷ்டிலாகினாய்டியா
வைரன்ஸ் என்னும் பூஞ்சைக் காரணிகளால் ஏற்படுகிறது.
இந்நோய் தற்போது
பல இடங்களில் முதிர்ந்த பயிர்களில் காணப்படுகிறது. பொதுவாக ஒரு நெல் கதிரில் சில மணிகளே
முதலில் பாதிக்கப்படுகின்றன. பின்னர் மஞ்சள் நிற வெல்வட் பழங்கள் போன்று மாறுகின்றன.
பந்து போன்ற கரிப்பூட்டைகள் (Smut) முதலில் சிறியதாக இருந்து பின்னர் 1 செ.மீ அளவு
வளர்ந்து விடும்.
கரிப்பூட்டை, கதிர் முழுவதும் பரவி பின்னர் கரும்பச்சை நிற வெல்வட் போன்று காட்சியளிக்கும். தற்போது இந்நோய் மகசூலில் பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய நிலையில் உள்ளது. பூக்கும் தருணமே இந்நோய் ஏற்பட முக்கிய தருனமாகும்.
பூக்கும் தருணங்களில் தொடர்மழை மற்றும் ஈரப்பதமே,
இந்நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். மண்ணில் அதிக தழைச்சத்து மற்றும் பலத்த காற்றே இந்நோய்
காரணியின் ஸ்போர்கள் பக்கத்து வயல்களுக்கு பரப்புவதற்கு முக்கிய காரணமாகும்.
தாமதமாக பயிர்
செய்வதும் இந்நோய் பரவ முக்கிய காரணமாகும். இதனைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்தல்.
பாதிக்கப்பட்ட நெல் மணிகளை அகற்றி அழித்தல், தழைச்சத்து உரத்தை பிரித்து இடுதல், நோய்
தாக்குதல் ஏற்படும் இடங்களில் முன்னதாகவே பயிரிடுதல், பயிர்கள் ஈரமாக இருக்கும் போது
இடையுழவு செய்யக்கூடாது.
பந்து போன்ற கரிப்பூட்டைகளை (Smut Balls) சரியான முறையில் அகற்றி அழிப்பதன் மூலம் பின்னர் சாகுபடி செய்யும் நெற்பயிர்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
பொருளாதார சேத நிலைக்கு
பின்பு கீழ்கண்ட இரசாயன மருந்துகளான புரோபிகோனசோல் 25 EC யை ஒரு எக்டருக்கு 500 மி.லி
என்ற அளவிலும் (அல்லது) காப்பர் ஹைடிராக்சைடு 77% WP ஒரு எக்டருக்கு 1.25 கிலோ என்ற
அளவிலும் கண்ணாடி மடல் கதிர் இலைப் பருவத்திலும் மற்றும் 50 % பூக்கும் தருணத்திலலும்
தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
நெல் பயிர் பாதுகாப்பு முறைகளும், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...