தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள்!!

 


தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள்!!


பொதுவாக பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே உழவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 


பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவு பயன்படுத்தும் போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சுற்றுப்புறமும் மாசுபடுகிறது. இவற்றைத் தவிர்க்க உழவர்கள் தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

 

வேம்பின் அனைத்து பாகங்களும் உழவர்களுக்குப் பயன்படுகின்றன. வேப்பந்தழையை உரமாகவும் பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தாம். வேப்பமுத்துக் கரைசலைப் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கை யூரியா போன்ற இரசாயன உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கலாம்.



வேப்பெண்ணையை தனியாகவும் பிற பூச்சி மருந்துகளுடன் கலந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம். வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6%, சாம்பல் சத்து 2.0% எனும் அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம். 


வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துபூச்சிகள், துளைப்பான்கள் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து தடுக்கலாம்.

 

வேப்பங்கொட்டை கரைசல்


10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்ட 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்துக் கைத்தெளிப்பான் கரைசல் தெளிப்பதன் மூலம் 



பயிர்களில் தோன்றும் கம்பளிப்புழு, அசுவினி, தத்துப்பூச்சிகள், புகையான், இலைச் சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் ஈ, கதிர் நாவாய்ப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். 3 லிட்டர் வேப்பெண்ணெயுடன் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு நன்றாக கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து பயன்படுத்தலாம். 


பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலானவற்றை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.

 

நொச்சி – வேப்பந்தழை


5 கிலோ நொச்சி தழையையும் 5 கிலோ வேப்பந்தழையையும் நீர் நிரம்பிய பானை ஒன்றில் இட்டுக் கொதிக்க வைத்து அதனைக் கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்து பின்னர் வடிகட்ட அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஏக்கர் ஒன்றுக்கான நெற்பயிரில் தெளித்து இலைச்சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

 


நொச்சி வேப்பந்தழையை அரைத்து பயன்படுத்தினால் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. வேம்பில் அசாடிராக்டின், நிம்பிடின் போன்ற பொருட்கள் இருப்பதால் பூச்சி, நோய் தடுப்பாக பயன்படுகிறது. 


எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிக்கனமாக அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி பயிரிடும் பயிர்களை நோய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதோடு சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்று இராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சீ.சக்திகணேஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேளாண் துறை ஆலோசனை!!


டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தலாம்!!


பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த வேளாண்மை இயக்குநர் ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 1

Time to Tips – 2

Time to Tips – 3

Time to Tips – 4

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments