விவசாயிகளே! அதிக லாபம் கொடுக்கும் அஸ்ஸாம் மலை ஆடுகள் வளர்ப்பு!!
அஸ்ஸாம் மலையாடுகளைப்
பொறுத்த வரை முழுவதுமாக வெள்ளை வண்ணம் மற்றும் சில சமயங்களில் கருப்பு வண்ண புள்ளிகள்
அதன் பின்பக்கம் மற்றும் கால்களில் தென்படுகிறது. இவ்வின ஆடுகள் குட்டையான கால்களையும்
சிறிய உடம்பினையும் கொண்டிருக்கின்றது. பொதுவாக இருபால் ஆடுகளும் உருளை வடிவான பொம்புகளைப்
பெற்றிருப்பதுடன் மேல் நோக்கி வளர்ந்து வெளிப்பக்கம் நீட்டிய வண்ணம் உள்ளது.
இவை பரவலாக
அஸ்ஸாம் மாநிலத்திலும் அதன் அருகேயுள்ள மேகாலயா மாநிலத்திலும் அதிகமாக தென்படுகிறது.
காதுகளைப் பொறுத்தவரை நடுத்தரமானதாகவும் கிடைமட்டமாகவும் நேராக நீண்டு காணப்படுகிறது.
காதுகள் கூர்மையான முடிவைக் கொண்டு அழகாக காட்சியளிக்கின்றது.
இறைச்சிக்காகவே
இவ்வினத்தினை அதிகம் வளர்க்கின்றனர். இறைச்சி சுவையானதாகவும் செழிப்பானதாகவும் மிருதுவாகவும்
இருப்பது இதன் சிறப்பு. அது மட்டுமல்ல, பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்ற வகையைச்
சார்ந்ததாகும்.
10 மாத வளர்ச்சியில்
வெள்ளாட்டுக் கிடாக்கள் 48 செ.மீ. உயரமும் பெட்டைகள் 47 செ.மீ. உயரமும் கொண்டிருக்கின்றது.
கிடாக்களின் உடம்பின் நீளம் 57.83 செ.மீட்டரும் பெட்டைகளின் நீளம் 55 செ.மீட்டரும்
கொண்டுள்ளது. நல்ல வளரச்்சியடைந்த வெள்ளாட்டுக்கிடா 25 கிலோவும் பெட்டை 20 கிலோ எடையும்
இருக்கிறது.
சராசரியாக
9 மாத அளவில் முதல் பருவத்திற்கு வந்து சினை பிடிக்க ஆரம்பிக்கிறது. சுமாராக 440 நாட்களில்
முதல் ஈத்து குட்டிகளை ஈனுகிறது. 7 மாத கால இடைவெளியில் மீண்டும் சினை பிடிக்கிறது.
இரண்டு அல்லது அதற்கு மேலும் குட்டிகளைப் போடுகிறது. பிறக்கும் பொழுது கிடாக் குட்டிகள்
1.26 கிலோவும், பெட்டை 1.13 கிலோவும் எடை கொண்டிருக்கிறது.
பாலின் அளவு
குறைந்து காணப்பட்டாலும் அதில் மருத்துவ குணங்கள் மிகுந்த காணப்படுவதுடன், இறைச்சி
சுவையானதாகவும், மிருதுவாகவும் இருகிறது. அஸ்ஸாம் மாநில மலைப்பகுதி மாவட்டமான வடக்கு
கச்சார் மற்றும் கர்பி ஆங்லாங், மேகாலயா மாநிலத்தில் பரவலாக இவ்வினம் தென்படுகிறது.
கண்கள் நலல
செழிப்போடு கருவிழி தவிர, நல்ல வெண்நிறத்தில் அழகாக தோற்றமளிக்கிறது. காதுகளின் உட்பகுதி
நன்கு சிவந்து காணப்படுகிறது. மூலகைச் செடிகளை அதிகம் உண்ணுகிற காரணத்தாலும் இரசாயன
உரமே பார்த்திராத மலைப்பகுதியில் விளைந்த புல் பூண்டுகளை தீவனமாக எடுத்துக் கொள்கிற
காரணத்தாலும் இதற்கு நோய் எதிர்ப்பாற்றல் மிகுந்து இருக்கிறது. ஆகவே தொற்று நோய்கள்
இதனைத் தாக்குவது வெகுவாக குறைந்தேயிருக்கிறது.
வாயின் கீழ்த்தாடையில்
பளுப்பும் வெண்மையும் கலந்த முடி தாடி போல தோற்றமளித்து ஆட்டிற்கு அழகு சேர்க்கிறது.
குட்டையான வாலில் பொன்னிற முடி காணப்படுகிறது.
2012ம் ஆண்டு
கால்நடைக் கணக்கெடுப்பின்படி 11,80,000 அஸ்ஸாம் மலையாடுகள் இருக்கின்றது. இவ்வின ஆடுகளை
வாங்க விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட அஸ்ஸாம் வெள்ளாட்டுப் பண்ணையைத் தொடர்பு கொண்ட
பெறலாம். தொடர்பு எண் 81310 00920 மற்றும 94017 88363.
கூடுதல் விபரங்களுக்கு
டாக்டர் கே.வி.கோவிந்தராஜ், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, கவுந்தம்பாடி 638 455. ஈரோடு.
அலைபேசி : 98427 04504.
மேலும் படிக்க....
ஆடுகளை பாதிக்கும் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி? முழு விபரம் இதோ!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...