Random Posts

Header Ads

கோடையில் பயறு வகை பயிர்கள் சாகுபடி ஓர் சிறப்பு பார்வை!!



கோடையில் பயறு வகை பயிர்கள் சாகுபடி ஓர் சிறப்பு பார்வை!! 


தற்போது நெல் அறுவடை தருணத்தில் உள்ளது. அறுவடை முடிந்த வயலில் உள்ள ஈரப்பதத்தை வைத்து பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொண்டைகடலை சாகுபடி செய்யலாம். 


மனிதர்களுக்கு தேவையான புரதசத்து வாரி வழங்க கூடிய பயிர் வகை பயிர்களுக்கு குறைந்த அளவிலான தண்ணீர தேவை போதுமானது. நமது நாடு பயிர் சாகுபடி பரப்பளவில் முதலிடத்தில் இருந்தாலும்கூட உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. 



சராசரியாக 340 கிலோ தான் உள்ளது. இந்த குறைவாக மகசூலைக்கு பயிறு சாகுபடியில் விவசாயிகள் போதிய பயிர் மேலாண்மை முறை பின்பற்றாதது தான்.

 

அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள்

 

சரியான ரகங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு விதைக்க வேண்டும். பயிர் எண்ணிக்கையினை சரியான முறையில் அதாவது சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும். 


அவ்வாறு இருந்தால் தான் கூடுதலாக மகசூல் கிடைக்கும். பயிர் வகை பயிர்களை விதை நேர்த்தி, ரைசோபியம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இரண்டு களை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது பழமொழி. 


களை எடுப்பதில் பலர் சரியாக செய்யவதில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். விதைத்த 25,45 நாளில் 2% டி.ஏ.பி கரைசல் தெளிக்க வேண்டும் (1 லிட்டர் தண்ணீருக்கு 2கிராம் அளவு). இதற்கு பின்னர் அதிக அளவிலான பூக்கள் உருவாக்கிட வளர்ச்சி ஊக்கி பிளோனே பிக்ஸ் 40 பிபி எம் அளவில் கலந்து தெளிக்கலாம். 



இவ்வாறாக செய்தும் சரிவர வளர்ச்சி இல்லாமல் இருந்தால் 1 கிலோ பொட்டாசியம் குளோரைடு கரைசல் தெளிக்கலாம். விதைக்கும் பயறு வகை நுண்ணூட்ட சத்து இடாவிட்டால் tnau பயறு வகை ஓன்டர் 2 கிலோ தெளிக்க வேண்டும். 


இதனால் 20 சதவித மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பயிறு வகை செடிகளை அறுவடை செய்யும் போது செடிகளை வேருடன் பிடுங்காமல் அறுக்க வேண்டும். 


இவ்வாறாக செய்வதால் அந்த செடிகளின் வேர் முடிச்சுகள் நிலத்திலேயே தங்கிவிடும். இதன் மூலமாக 17 முதல் 27 கிலோ தழைசத்தை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை கொண்டது. வேர் முடிச்சுகள் இலை தழைகள் மண்ணில் விழுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும். பயிறு வகை பயிர்களின் பூச்சிநோய் தாக்குல் தேவை அறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ளலாம். 



இலை தழைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக 65 முதல் 75 நாட்களில் விவசாயிகளுககை கூடுதல் வருமான கிடைக்கும். எனவே, பயறு சாகுபடியில் தன்னிறைவு அடைய வரப்பு ஓரங்கள், ஊடுபயிர், கலப்பு பயிர், சால் பயிர், யாக பயறு வகைகளை சாகுபடி செய்வோம். கூடுதலாக வருமானம் பெறுவோம்.


தகவல் வெளியீடு


அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை. 94435 70289.


மேலும் படிக்க....


உளுந்து பயிரில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!


வயல்களில் பூச்சி கட்டுப்பாடு மேலாண்மை! விவசாயிகள் அறிய வேண்டிய செயல்முறைகள்!!


நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு விவசாயிகள் அறிய வேண்டிய நுண்சத்து பரிந்துரைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments