Random Posts

Header Ads

மிளகாயில் செடியில் முரணைச் சிலந்தியினைக் கட்டுப்படுத்துவது எப்படி?




மிளகாயில் செடியில் முரணைச் சிலந்தியினைக் கட்டுப்படுத்துவது எப்படி?


இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டாரப் பகுதியான மல்லல், திருப்புல்லானி வட்டாரப் பகுதியான மாலங்குடி, இனிசேரி மற்றும் நைனார்கோவில் வட்டாரப் பகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை, மும்முடிச்சாத்தான் கிராமங்களில் பயிடப்பட்டுள்ள முண்டு மிளகாயில் தற்பொழுது முரணைச் சிலந்தியின் தாக்குதலானது தென்படுகிறது.


முரணைச் சிலந்தியானது சுமார் 60 சதவீத அளவிற்கு மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றது. இச்சிலந்தியின் தாக்குதலானது மிளகாய் பயிரினை தொடர்ந்து ஒரே இடத்தில் பயிரிடும் போது அதிகமாக இருக்கும்.

 


அறிகுறிகள்


இளம் மற்றும் வளர்ச்சியடைந்த சிலந்திகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால் இலைகளானது கீழ் நோக்கி சுருண்டும், இலைக்காம்புகள் நீண்டும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலையின் அடிப்பகுதியானது பளபளப்பாகவும், பழுப்பு நிறத்துடனும் காணப்படும். 


மேலும், இலைகளானது கரும்பச்சை நிறத்தில் காணப்படும். பாதிப்பு அதிகமாகும் பொழுது, இலைகள் மற்றும் பூ மொட்டுகளானது உதிர்ந்து விடும். மேலும், நுனி தளிர் இலைகளானது கருகி, காய்ந்து விடும். இதனால் செடிகளின் வளர்ச்சியானது தடைபட்டு விடும். பாதிக்கப்பட்ட பழங்களானது நிறமில்லாமலும், சுருங்கியும் காணப்படும். 



முரணைச் சிலந்தியினால் பாதிக்கப்பட்ட பழங்களானது கீழே உதிர்ந்து விடும். இதனால் சந்தையில் மிளகாயின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல், விலையும் குறைந்து விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.

 

மேலாண்மை முறைகள்


முரணைச் சிலந்தியினைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட சிலந்திக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை கைத்தெளிப்பான் கொண்டு சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும்.


  • ஸ்பைரோமெசிபென் 22.9% எஸ்சி 0.5 மிலி,லிட்டர் (100 மிலி,ஏக்கா்)

  • பென்பைராக்சிமேட் 5% இசி 1.0 மிலி,லிட்டர் (200 மிலி,ஏக்கா்)

  • பெனசாகுயின் 10% இசி 2.0 மிலி,லிட்டர் (400 மிலி,ஏக்கா்)

  • புரோபர்கைட் 57% இசி 2.5 மிலி,லிட்டர் (500 மிலி,ஏக்கா்)

 

கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதே போல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 



பூச்சி மருந்தின் திறனை அதிகப்படுத்த மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100-200 மிலி என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு, முனைவர் கு.இளஞ்செழியன், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) மற்றும் முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் படிக்க....


மிளகாயில் அசுவிணி பூச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி? மேலாண்மை முறைகள்!!


குடைமிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் அளவில்லா லாபம் பெறுவது எப்படி?


குண்டு மிளகாயில் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments