நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில்
உள்ள கால்வாய்களின் ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைப்
பருவத்தை நெருங்கியுள்ளன. இதையடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன.
நெல் கொள்முதல்
அறுவடை செய்யும்
நெல்லினை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்
கழகத்தால் தொடங்கப்படவுள்ளன.
தற்பொழுது ஈரோடு
வட்டாரம் வைரா பாளையத்திலும், பெருந்துறை வட்டாரத்தில் பெத்தாம் பாளையத்திலும் ஏற்கனவே
கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன்பதிவு அவசியம்
விவசாயிகள்
இந்த மையங்களை பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு
ஏதுவாக விவசாயிகள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு கணிணி
மூலமாகவோ அல்லது பொது இ சேவை மையங்கள் மூலமாக http://tncsc-edpc.in என்ற இணையதள முகவரியில்
பதிவு செய்து கொள்ளலாம்.
தேவைப்படும்
ஆவணங்கள்
- சுயவிபரம்
- நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் விபரம்
- பரப்பளவு
- எதிர்பார்க்கும் மகசூல்
- கொள்முதல் மையத்திற்கு நெல்லினைக் கொண்டுவரும் உத்தேச தேதி
விவசாயிகள்
மேலே கூறிய ஆவணங்களுடன் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு
உறுதி செய்யப்பட்ட விபரம், நெல் கொள்முதல் மையத்தின் பெயர் நாள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
நெல் விற்பனை
விவசாயிகள்
அந்த மையங்களுக்கு சென்று நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகள்
இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
கிருஷ்ணன் உண்ணி,
மாவட்ட ஆட்சியர்,
மேலும் படிக்க....
ஒரு விவசாயிக்கு 2 வேளாண் எந்திரங்களுக்கு ரூ.40 லட்சம் மானியம்! உடனே முந்துங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...