தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு! வானிலை மையம் புதிய அறிவிப்பு!
தமிழகத்தில்
5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை
மறுநாள் (26-01-2022) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள்,
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும்
27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்
ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட
வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும்
28ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும்
வறண்ட வானிலை நிலவ கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை ஒய்வு பெற்ற நிலையில், தற்போது வந்த இந்த புதிய அறிவிப்பு சற்று அதிர்ச்சியாக உள்ளது, மீண்டும் மழையா என தோன்றுகிறது.
ஏனென்றால் பொதுவாக மழையினால் போக்குவரத்து பிரச்சனை, தண்ணீர் தேக்கம் என பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கின்றது.
அந்த வகையில் வானிலை அறிவிப்பை முன்பே தெரிந்துக்கொள்வது நல்லது. அதுவும் தொடர்ந்து சில நாட்களின் வானிலை நிலவரம் தெரிந்தால் சிறப்பு.
மேலும்
படிக்க....
மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை பசுமை உரம்! குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...