Random Posts

Header Ads

பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளான மண்புழு உரம் தயாரித்தல்! முழு விபரம் இதோ!!



பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளான மண்புழு உரம் தயாரித்தல்! முழு விபரம் இதோ!!


மண்புழு உரம் தயாரித்தல்


மண்புழு உரத்தில் அதிக சத்துக்கள் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் காணப்படுகின்றன மற்றும் நன்மை தரும் நுண்ணுயிர்களும் அதிகம் உள்ளன.

 

மண்புழு தேர்வு


ஆப்ரிக்கன் மண்புழு (யூடிரில்லஸ் யூஜினியே), சிவப்பு மண்புழு (ஐய்சினியா போடிடா), மக்கும் மண்புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்) போன்றவை அனைத்தும் மண்புழு உர உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்கள் ஆகும்.

 


மண்புழு உர உற்பத்திக்கான உகந்த இடம்


நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் அவசியம். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை, பின்புற கட்டடங்களை உபயோகப்படுத்தலாம். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால் நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.

 

படுக்கை அமைத்தல்


நெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்பு தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்கு பரப்பி ஆற்று மணலை இந்தப் படுக்கையில் மேல் 3 செ.மீ. உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண்ணைப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும்.

 

கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் அங்காடி கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் இவை அனைத்தும் மண்ப]ழு உரம் தயாரிக்க மிகச் சிறந்தது.

 


மண்புழு படுக்கையில் ஈரப்பதம் 70 சதவிகிதம் அமையுமாறு கண்காணித்தல் வேண்டும். ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு இரண்டு கிலோ மண்புழு தேவைப்படும். மண்புழுக்களை மண்புழு படுக்கையின் மீது தூவினால் போதும். மண்புழுக்கள் தானாகவே உள்ளே சென்று விடும்.

 

மண்புழு உரம் அறுவடை செய்யும் முறை


மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு உரத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். இதனை வாரம் ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும். மண்புழு உரத்தினை அறுவடை செய்யும் பொழுது, மண்புழு வெளியில் தெரியும் நிலை வரைக்கும் அறுவடை செய்ய வேண்டும். சிறிய படுக்கை முறையில், கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.

 

அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தினை 40 சதவிகிதம் ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். மண்புழு உரத்தினை சாக்குபைகளில் வைத்துக் கட்டாமல், திறந்த வெளியில் சேமித்து வைப்பது சிறந்தது. 


40 சதவிகிதம் ஈரப்பதத்துடன் திறந்த வெளியில் சேமித்து வைப்பதால் நன்மை தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதோடு, மண்புழு உரத்தின் தரமும் குறையாமல் இருக்கும். விற்பனை செய்யும் தருணத்தில் மட்டுமே மண்புழு உரத்தினை சாக்குப் பைகளில் மாற்றி அமைத்தல் வேண்டும்.

 


மண்புழு உரம் சேகரித்தல்

 

சில்பாலின் பையில் மண்புழு உரம் தயாரிப்பு

 

  • மண்புழு உரப்பை அளவு – 12’x4x2 


  • மண்புழு உரப்பை கொள்ளளவு – 3000 கிலோ


  • இடவேண்டிய கழிவு – சாண விகிதம் – 3: 1


  • மண்புழுவின் பெயர் – யூடிரில்லஸ் யூஜினா


  • தேவையான மண்புழு அளவு – 4 கிலோ


  • தேவையான நாட்கள் (சராசரி 1 குழி) – 120 நாட்கள்


  • மண்புழு உர மகசூல் – 1300 கிலோ


தகவல் வெளியீடு


முனைவர் கோ.நெல்சன் நவமணி ராஜ், உதவிப் பேராசிரியர் (விதை நுட்பவியல்), முனைவர் த.செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் (பயிர் நூற் புழுவியல்) மற்றும் முனைவர் வீ.மு. இந்துமதி, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.


மேலும் படிக்க....


மனதைக் கவரும் ரோஜா பூ சாகுபடி! ரோஜா பூ நோய்கள் மற்றும் பூச்சிகள் மேலாண்மை!!


தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு! வானிலை மையம் புதிய அறிவிப்பு!


குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உளுந்து பயிரிடலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments