Random Posts

Header Ads

விவசாயிகள் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெறலாம்!!




விவசாயிகள் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெறலாம்!!


பெரம்பலூர் மற்றும் அரியலூர் விவசாயிகள் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து விதை பரிசோதனையின்படி சாகுபடி செய்வதனால் அதிக மகசூல் பெறலாம் என விதைபரிசோதனை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதைபரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டு வருகிறது.

 


இந்நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்ததன்மை மற்றும் பிற இரகக்கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. 


2021-22 ஆண்டு இந்நிலையத்தின் மூலம் 2820 விதை மாதிரிகள் பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு இதுவரை 2600 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 147 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுபட்டுள்ளது.

 

மேலும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் கடந்த வடகிழக்கு பருவமழையால் கிணறு, ஏரி மற்றும் குளங்களில் சேமித்துள்ள நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்ய நவரை பருவத்திற்கு ஏற்ற இரகங்கள் ஏ.டி.டீ-45, ஏ.டி.டீ-43, கோ-51, ஏ.டி.டீ36, ஏ.டி.டீ37, ஏ.எஸ்.டி-16, டி.கே.எம்-9, நெல் இரகங்களுக்கு குறைந்தபட்ச முளைப்புதிறன்-80மூ, ஈரப்பதம் அதிகபட்சம்-13மூ, புறத்தூய்மை குறைந்தபட்சம்-98மூ, அதிகபட்ச பிற இரகக்கலப்பு-0.20மூ, தரக்குறியீடுக்குள் இருக்கும் படியும் இது போன்ற நெல் இரகங்களின் குணாதிசியங்கள்.

 


ஏ.டி.டீ-45: 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்டது,


ஐ.ஆர்-50/ ஏ.டி.டீ-37-ன் கலப்பு இரகம்,


வயது: 110 நாட்கள்


மகசூல்: 6100கிலோ/ ஹெக்டர்.


புகையான் எதிர்ப்பு சக்தி கொண்டது, ஆணைக் கொம்பன் மற்றும் நூற்புழுவின் பாதிப்பை தாங்கிவளரும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 17.5 கிராம்

 

ஏ.டி.டீ-43: 1998-ம் ஆண்டு வெளியிடப்பட்டது,


ஐ.ஆர்-50 ஐ.டபுயு+ பொண்னி-ன் கலப்பு இரகம்,


வயது: 110 நாட்கள்


மகசூல்: 5900 கிலோ ஹெக்டர்.


பச்சைதத்து பூச்சிக்கு எதிற்புசக்தி கொண்டது,


அதிக தூர் விடும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 15.5 கிராம்

 


ஏ.டி.டீ-43: கோ-51: 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டது,


ஏ.டி.டீ-43 ஆர்.ஆர் 272-1745 -ன் கலப்பு இரகம்,


வயது: 105-110 நாட்கள்


மகசூல்: 6641கிலோஃஹெக்டர்.


குலைநோய், புகையான் மற்றும் பச்சைதத்து பூச்சிக்கு எதிற்பு சக்தி கொண்டது,


அதிகமகசூல் கொடுக்கும்தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 16.0 கிராம்

 

ஏ.டி.டீ-36: 1980-ம் ஆண்டு வெளியிடப்பட்டது,


திருவேணி ஐ.ஆர்.-20 -ன் கலப்பு இரகம்,


வயது: 110 நாட்கள்


மகசூல்: 5500 கிலோ ஹெக்டர்.


குலைநோய், புகையான் பூச்சிக்கு எதிற்பு சக்தி கொண்டது, அதிகமகசூல் கொடுக்கும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 20.6 கிராம்

 


ஏ.டி.டீ-37: 1987-ம் ஆண்டுவெளியிடப்பட்டது,


பி.ஜி-280-12 பீ.டீ.பி.-33 -ன் கலப்பு இரகம்,


வயது: 105நாட்கள்


மகசூல்: 6200கிலோ ஹெக்டர்.


பலநோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிற்பு சக்தி கொண்டது, அதிகமகசூல் கொடுக்கும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 23.4 கிராம்

 

ஏ.எஸ்.டி-16: 1986-ம்ஆண்டுவெளியிடப்பட்டது,


ஏ.டி.டீ-31 கோ-39 -ன் கலப்பு இரகம்,


வயது: 110-115நாட்கள்


மகசூல்: 5600 கிலோ ஹெக்டர்.


குலைநோய்க்குஎதிற்புசக்திகொண்டது, மத்திய தூர் வளரும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 24.2 கிராம்

 

டீ.கே.எம்-9: 1978-ம் ஆண்டுவெளியிடப்பட்டது,


டீ.கே.எம்-7 ஐ.ஆர்.-8 -ன் கலப்பு இரகம்,


வயது: 100-105 நாட்கள்


மகசூல்: 5019கிலோ ஹெக்டர்.


நல்ல எதிற்பு சக்தி கொண்டது, வறட்சியை தாங்கி வளரும், அதிக மகசூல் கொடுக்கும் தண்மைக்கொண்டது.


ஆயிரம் விதைகளின் எடை: 25.13 கிராம்

 

இப்படிபட்ட தரமான விதைகளினால் நல்ல விளைச்சலை பெறலாம் விதைப்பு செய்யவுள்ள விதைகள் தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைத்திடவேண்டும். 



மேலும் சரியான ஈரப்பத்தை அறிந்து விதைகளை சேமிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சானத் தாக்குதலிருந்து பாதுகாத்து விதைகளை அதிக நாட்களுக்கு முளைப்புத்திறன் குறையாத பாதுக்காக்களாம் அதற்காக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யப்படவுள்ள, விதைக் குவியல்களிலிருந்து 100 முதல் 250 கிராம் அளவுள்ள விதை மாதிரி விதைகளை எடுத்து மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட மைய நூலகம் அருகில், துறைமங்கலம், பெரம்பலூர்-621220 என்ற முகவரிக்கு அனுப்பி விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். 


விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகின்றது. நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன்படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சி நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெற முடியும். 


மேலும் நேரடி விதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்க முடியும். ஒரு பணி விதை மாதிரியினை ஆய்வு செய்திட ஆய்வுக் கட்டணமாக ரூ.30 -மட்டுமே செலுத்த வேண்டும்.


ஆய்வுமுடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் என திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர், மனோன்மணி, கேட்டுக் கொண்டுள்ளார்கள். 


மேலும் விவரங்களுக்கு விதை பரிசோதனை நிலைய முகவரிக்கோ அல்லது கைபேசி எண். 95970 55342/96298 94098ல் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க....


நெல் தரிசு பயிறு வகை சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களும் மற்றும் விதை தரங்களும் சிறப்பு பார்வை!!


நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு!!


நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்! வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments