அதிக
மகசூல் பெற மாற்றுப்பயிர் சாகுபடி செய்வது மற்றும் ஒருங்கிணைந்த முறையில் களை மேலாண்மை!!
வேளாண்மைத் துறை ஆலோசனை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உழவர் பயிற்சி நிலையம் சிவகங்கை வேளாண்மை அலுவலர் வீரய்யா, விவசாயிகளுக்கான கிராம அடிப்படை பயிற்சி மறதிக்கண்மாய் கிராமத்தில் பயிற்சி நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில்
அவர் கூறியாவது களை மேலாண்மை பயிர் சுழற்சி மற்றும் நிலக்கடலையில் ஜிப்சம் இடுவது குறித்தும்
விரிவான முறையில் விவசாயிகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது .
வேளாண்மையின் பயிர் சுழற்சி
வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறையாகும் முதல் பருவத்தில் நெல் அடுத்த பருவத்தில் உளுந்து அதற்கடுத்து பயறு வகைகள் என மாறிமாறி பயிரிடும் பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.
ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து
பயிரிடும் முறையாகும். மண்ணின் வளத்தை பெருக்க கொளுஞ்சி கொள்ளு சணப்பை தக்கைப்பூண்டு
போன்றவற்றை பயிர் செய்து ஒரு மாதம் கழித்து பூக்கும் தருவாயில் அதனைமடக்கிஉழுவதன் உழுவதன்
மூலம் மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும்.
பார்த்தீனிய களை செடிகளை அகற்றும் முறை
வேளாண் தொழிலில் களைச் செடிகளை கட்டுபடுத்துவது சற்று சவாலான செயலாகவே உள்ளது. பார்த்தீனிய செடியால் மனிதனுக்கு சுவாசகோளாறு, தோல் வியாதியும் ஏற்படுகிறது பராம்பரிய முறையில் பார்த்தீனிய செடிகளை அழிப்பதற்கான வழிகளை சிவகங்கை, உழவர் பயிற்சி நிலைய, வேளாண்மை அலுவலர், விவசாயிகளுக்கு கூறியதாவது,
பார்த்தீனியத்தை கட்டுபடுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் உப்பை நன்கு கரைத்து அத்துடன் 2 மி.லி ஒட்டும் திரவம் கலந்து தெளித்து பார்த்தீனிய களை செடிகளை அகற்றலாம்.
மேலும் முளைத்த
பின் களைக்கொல்லியான மெட்ரிபூஜின் 3 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிரில்லாத
நிலையில் தெளிக்க வேண்டும். மேலும் விளைநிலங்களில் பயிருக்கு தகுந்தவாறு ரசாயனகளைக்
கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் பார்த்தினிய செடிகளை கட்டுபடுத்தலாம் என்று விவசாயிகளுக்கு
விரிவான முறையில் வேளாண்மை அலுவலர் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
நிலக்கடலை
பயிரில் ஜிப்சம் இடுதல் : ஜிப்சம் உரமானது மண்ணின் கடினத்தன்மையை போக்குவதால் மண் இலகுவடைந்து
விடும். இதனால் நிலக்கடலை செடியின் விழுதுகள் எளிதாக மண்ணில் ஊன்றும் என்று விரிவாக
விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45 வது நாளில் பாசன பயிர்க்கும் 40-75வது நாளில் மானாவாரி பயிருக்கு செடிகளின் ஒரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இட வேண்டும் மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும் கால்சியம் மற்றும் கந்தக குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனை தரும்.
ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை இராசயன உரங்களுடன்
அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவை பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்திமெலடி
மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும்
பயிற்சியில்
அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு அட்மா திட்டத்தில் செயல்படுத்தி வரும் செயல்விளக்கம்
விவசாயிகளுக்கான உள் மற்றும் வெளி மாவட்ட மற்றும் மாநில அளவிலான பயிற்சிகள் மற்றும்
உயிர் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு
எடுத்துக் கூறினார்.
மேலும்
படிக்க....
கத்திரி பயிரைத் தாக்கும் குருத்து மற்றும் காய்த் துளைப்பான் பூச்சி மேலாண்மை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...