Random Posts

Header Ads

கத்திரி பயிரைத் தாக்கும் குருத்து மற்றும் காய்த் துளைப்பான் பூச்சி மேலாண்மை!!


கத்திரி பயிரைத் தாக்கும் குருத்து மற்றும் காய்த் துளைப்பான் பூச்சி மேலாண்மை!!


இந்தியாவில் சுமார் 1.4 மில்லியன் சிறு மற்றும் குறு விவசாயிகள் கத்திரிக்காய் பயிரை வளர்க்கிறார்கள். இது அவர்களுக்கு வழக்கமான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 


இந்த பூச்சியின் சேதம், நாற்று கட்டத்தில் தொடங்கி பழ அறுவடை வரை தொடர்கிறது. புழு பருவத்தில், பெரிய இலைகள் மற்றும் இளம் தளிர்களின் இலைக்காம்புகள் மற்றும் நடுப்பகுதிகளில் துளைக்கின்றன, இறுதியாக வாடிவிடுதல் ஏற்படுகிறது.

 


விலங்கியல் பெயர்: லூசினோடஸ் ஆர்பொனாளிஸ் 


பொதுப் பெயர்: குருத்து மற்றும் காய்த்துளைப்பான்

 

சேதத்தின் அறிகுறிகள்


கத்திரியின் இளம் குருத்து வாடிக் காணப்படும்/நடுக்குருத்து காய்தல் குருத்து மற்றும் காய்களை துளைத்து அதனுள் உள்ள திசுக்களை உண்டு கழிவை துளைக்கு வெளியே தள்ளும், புழுக்களின் கடும் பாதிப்பால் மொக்கு மற்றும் சிறுகாய்கள் உதிர்ந்து விடும், இறுதியாக, இலைகள் வாடி, காய்ந்து விடும்.

 

பூச்சியின் பருவ விபரம்

 

முட்டை: வெண்ணிற முட்டை

 

புழு: சிவப்புக் கலந்த ஊதா நிறத்துடனும் பழுப்பு நிற தலையுடன் இருக்கும்.

 

கூட்டுப்புழு: சாம்பல் நிற, படகு வடிவ பட்டுக்கூடு.

 

பூச்சி


நடுத்தரமான அந்துப்பூச்சி. முன் இறக்கைகள் முக்கோண வடிவ, பழுப்பும் மற்றும் சிவப்பு நிற அடையாளங்களுடன் காணப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் கரும்புள்ளிகள் காணப்படும்.

 


பொருளாதார சேத நிலை


1-5 சதவிகித பழங்கள் பாதிப்பு

 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


  • சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டினை சேகரித்து அழிக்கவும். தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் கத்திரி பயிரிடுவதை தவிர்க்கவும்.


  • உட்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் நீளம் மற்றும் குறுகலான காய் உள்ள ரகங்களை பயிரிடவும். ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி அமைக்கவும்.


  • ப்ரைஸ்டோமரஸ்டெஸ்டுசியஸ் மற்றும் செராமஸ்டஸ்பெலவோரிப்டெலில் ஒட்டுண்ணியைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.


  • காய் முதிர்ச்சி மற்றும் அறுவடை நேரங்களில் பூச்சிக் கொல்லி உபயோகிப்பதை தவிர்க்கவும். வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்க வேண்டும்.

 

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

 

  • அசாடிராக்டின் (Azadirachtin) 1.0 % EC (10000 ppm) 3.0 மி என்றளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.


  • க்லோர்பைரிபாஸ் (Chlorpyrifos) 20 % EC 1.0 மி என்றளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.


  • டைமெத்தொயேட் (Dimethoate) 30 % EC 7.0 மி என்றளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.


  • குயின்னால்பாஸ் (Quinalphos) 25 % EC 1.5 மி என்றளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.


  • ப்ளுபென்டையமைய்டு (Flubendiamide) 20 WDG 7.5 கி என்றளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

 


கட்டுரையாளர்கள்


செ.ஹரிணி, உதவிப் பேராசிரியர் (தோட்டக்கலை), மின்னஞ்சல்: hariniselvaraj050894@gmail.com, கு.திருவேங்கடம், உதவிப்பேராசிரியர் (பூச்சியியல்துறை), மின்னஞ்சல்: thiru.thanks5@gmail.com, ஆர்.வி.எஸ். வேளாண்மைகல்லூரி, தஞ்சாவூர்.


மேலும் படிக்க....


மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்!!


விவசாயிகளுக்கான Kisan கடன் உச்சவரம்பு பட்ஜெட்டில் ரூ.4 லட்சமாக வாய்ப்பு!


பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாடு முறைகள்! பூச்சி சேதத்தைத் தடுக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments