மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லானி வட்டாரப் பகுதியான மாலங்குடி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் கு. இளஞ்செழியன், மிளகாய் பயிரில் பூச்சி மற்றும் நோய் பற்றி வயல்வெளி ஆய்வு செய்தார்.
ஆய்வின் முடிவில் முண்டு
மிளகாயில் தற்பொழுது காய்ப்புழுவின் தாக்குதலானது ஆங்காங்கே பரவலாக தென்படுவதாக கண்டறியப்பட்டது.
காய்ப்புழு
காய்ப்புழுவானது
மிளகாய் தவிர பயிறு வகைகள், புகையிலை, பருத்தி, தக்காளி முதலியவற்றை தாக்குகின்றன.
இதன் தாக்குதலால் சுமார் 10-50 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. சில சமயங்களில்
இதன் தாக்குதல் அதிகமாகும் பொழுது 90 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
சாதகமான
சூழ்நிலை
அதிகரிக்கும் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை, குறையும் ஈரப்பதம்.
சேத
அறிகுறிகள்
இளம்
புழுக்கள் இலை நரம்பினைத் தவிர இலைகளிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இவை இலை
தவிர வளா்ச்சியடையும் காய்களில் காம்புக்கு அருகில் துளையிட்டு உள்ளே உள்ள விதைகளை
உண்டு சேதம் விளைவிக்கின்றன. பாதிக்கப்பட்ட காய்களானது உதிர்ந்து விடுகின்றன. இதனால்
மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
மேலாண்மை
முறைகள்
பாதிக்கப்பட்ட
காய்கள் மற்றும் வளர்ச்சியடைந்த புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
ஒரு
ஏக்கருக்கு இனக்கவர்ச்சிப் பொறி 5 என்ற அளவில் வைத்து ஆண் பூச்சியை கவர்ந்து அழிக்க
வேண்டும்.
ஒரு
ஏக்கருக்கு உயிரியல் பூச்சிக்கொல்லியான பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 400 கிராம் மருந்தினை
200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஒரு
ஏக்கருக்கு கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து காய்ப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
- குளோரான்ட்ரனிலிபுரோல் (18.5 எஸ்சி) 60 மில்லி
- எமாமெக்டின் பென்சோயேட் (5 எஸ்ஜீ) 80கிராம்
- பிப்ரோனில் (5 எஸ்சி) 400 மில்லி
- புளுபென்டியமைடு (39.35 எஸ்சி) 50 மில்லி
- இன்டாக்சகார்ப் (15.8 இசி) 130 மிலி
- ஸ்பைனோசேட் (45 எஸ்சி) 64 மிலி
- ஸ்பைனட்டோரம் (11.7 எஸ்சி) 200 மிலி
- தயோடிகார்ப் (75 டபிள்யூபி) 400 கிராம்
கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதே போல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும் பொழுது பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சி மருந்தின்
திறனை அதிகப்படுத்த மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு
100-200 மிலி என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, முனைவர் கு.இளஞ்செழியன், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) மற்றும்
முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம்
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
படிக்க....
குண்டு மிளகாயில் பின் கருகல் மற்றும் பழ அழுகல் நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...