Random Posts

Header Ads

நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல தீவன மேலாண்மை! தீவனத்தில் கரையான்களின் பங்கு!!

 




நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல தீவன மேலாண்மை! தீவனத்தில் கரையான்களின் பங்கு!!


நமது வீடுகளில் வளர்கின்ற புறக்கடை நாட்டுக் கோழிகளுக்கு தனியாக தீவனம் அளிக்கப்படுவதில்லை. வீட்டில் எஞ்சியுள்ள தானியப் பொருட்கள் மற்றும் வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்கின்றன. 


ஆனால், தற்போது நாட்டுக்கோழி வளர்ப்பானது பண்ணையாளர்கள் மத்தியில் ஒரு பிரபலமான தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல தீவன மேலாண்மையின் மூலமே அவற்றின் உற்பத்தி திறனையும், இனப்பெருக்கத் திறனையும் அதிகரிக்கவும், நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் முடியும். 



பாரம்பரியமான தீவனப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போவதால் குறைந்த விலையில் மலிவான கோழித்தீவனம் கொடுப்பதால் மட்டுமே பண்ணையின் இலாபத்தை உயர்த்த முடியும். அவ்வாறான மாற்று தீவனங்களில் முக்கியமானவைகள் கரையான்கள், அசோலா, குதிரைமசால், வேலிமசால், முயல்மசால் ஆகும். கரையான்கள் ஒரு புரதச்சத்து மிகுந்த தீவனமாகும். 


இதனை தீவனமாகக் கொடுக்கும்பொழுது கோழிகளில் சீரான உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதமும், 44 சதவீதம் கொழுப்புச் சத்தும், 560 கலோரி எரிசக்தியும் உள்ளது. கரையான்களை உற்பத்தி செய்ய பழைய மரக்கட்டைத் துண்டுகள், உலர்ந்த வைக்கோல், ஓலை, மட்டை, பழைய துணி போன்ற நார்ப்பொருட்களை சேகரித்து, மண் பானையுள் அழுத்தி வைத்து, சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும். 


பிறகு பானையை வீட்டிற்கு வெளியே மாலையில் கவிழ்த்து வைக்க வேண்டும். மறுநாள் காலை பானை நிறைய கரையான் உற்பத்தியாகி விடும். பானையை திருப்பி வைத்து, கோழிகளை அருகே மேயவிட்டால், அவற்றிற்கு தேவையான கரையான்களை கொத்தித் தின்று செழித்து வளரும்.

 


கோழிக்குஞ்சகளுக்கு கொடுக்கும் பொழுது கரையான்களை சுடு தண்ணீரில் ஒரு நிமிடம் நனைத்து கொடுப்பதால் கரையான்கள் இறந்துவிடும் கோழிக்குஞ்சுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. மேலும், வளர்ந்த கோழிகள் கரையான்களை கொத்தி இறந்த பின்னறே உண்ணும், அவ்வாறு உண்டவுடன் தண்ணீர் கொடுக்கக்கூடாது. 


அடைமழை பெய்யும் போது, கரையான் உற்பத்தியாகாது. மேலும், எறும்புப் புற்று உள்ள இடங்களிலும், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்திய இடங்களிலும் கரையான் உற்பத்தியாகாது. கரையான்கள் மழைக்காலத்திற்கு முன்பும், மழை பெய்து முடித்ததிற்குப் பிறகும் அதிகமாக உற்பத்தியாகும். 


இவ்வாறாக விவசாயிகள் கரையான்களை உற்பத்தி செய்து புறக்கடை கோழி வளர்ப்பில் சுலபமான முறையில் விலங்கின புரதத்தினை கிடைக்கச் செய்து இலாபகரமாக நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்.

 


தகவல் வெளியீடு


முனைவர் இரா.தினேஷ்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் க.அருணாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர்-6

மேலும் படிக்க....


கோழி வளர்ப்பில் தீவனங்களின் செலவினங்களை குறைப்பதற்கான சில உத்திகள்!!


பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளான மண்புழு உரம் தயாரித்தல்! முழு விபரம் இதோ!!


ஆடு வளர்க்க கடன் வாங்க நீங்கள் செய்ய வேண்டியது? முழு விபரம் இதோ!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments