Random Posts

Header Ads

பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாடு முறைகள்! பூச்சி சேதத்தைத் தடுக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்!!



பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாடு முறைகள்! பூச்சி சேதத்தைத் தடுக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்!!


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழாயிரம் கோடி மதிப்புள்ள 14-16 மில்லியன் மெட்ரிக் டன் மதிப்புள்ள உணவு தானியப் பொருட்கள் சேமிப்பின் போது வீணாகின்றது. அவற்றில் பூச்சித் தாக்குதலினால் மட்டும் 1300 கோடி மதிப்புள்ள உணவு தானியப் பொருட்கள் சேமிப்பின் போது வீணாகின்றது. 


உலக வங்கியின் அறிக்கையின்படி “இந்தியாவில் சேமிப்பின்போது வீணாகும் உணவு தானியத்தைக் கொண்டு மூன்றில் ஒரு பங்கு ஏழைகளுக்கு உணவளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வின்படி தமிழ்நாட்டில் தானிய சேமிப்பின் போது 6.8 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. அவற்றில் 2 முதல் 4.2 சதவீதம் வரை பூச்சியினாலும் 2.5 சதவீதம் எலியினாலும், 0.85 சதவீதம் பறவைகள் மற்றும் 0.68 சதவீதம் ஈரப்பதத்தினாலும் வீணாகின்றது.

 

விதை சேமிப்பின்போது பூச்சிகள் வருமுன் தடுப்பதே சாலச் சிறந்ததாகும். தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் பூச்சி சேதத்தைத் தடுக்க தொன்றுதொட்டே பல தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து வந்துள்ளனர். அவற்றில் வழக்கத்திலுள்ள சில தொழில்நுட்பங்கள் கீழே காண்போம்.

 

வேப்ப இலை


நெல், பயறு வகை மற்றும் எண்ணெய்வித்து பயிர்களின் விதை சேமிப்பில் விதைகளுடன் வேப்ப இலைகளை கலந்து சணல் சாக்கில் கட்டி வைப்பதன் மூலம் அனைத்து வகையான சேமிப்பில் தாக்கும் பூச்சி வகைகளையும் அண்ட விடாமல் தடுக்கலாம்.

 


வேப்பெண்ணெய்


வேப்பெண்ணெய் மிகச்சிறந்த பூச்சி விரட்டியாகும். பயறுவகை விதைகள் சேமிப்பில் ஒரு கிலோ விதைக்கு 20 மிலி வேப்பெண்ணெய் கலந்து சணல் சாக்கில் கட்டி வைத்தால் பூச்சிகள் உண்ணுவது மட்டுமல்லாமல் விதையின் மேல் முட்டையிடுவதும் தடுக்கப்படுகிறது.

 

வேப்ப விதைக்கரைசல்


விதைகளை குறுகிய கால விதை சேமிப்பிற்கு சணல் சாக்குகளை வேப்ப விதைக்கரைசலில் நனைத்து நிழலில் காயவைத்து அவற்றில் நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் விதைகளை சேமித்தால் சாக்கிலிருந்து வரும் வாடைக்கு பூச்சிகள் நெருங்காது. (10 கிலோ வேப்ப விதையை பொடியாக்கி அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து பின்பு வடிகட்டினால் கிடைப்பதே வேப்ப விதைக்கரைசல்.)

 


நாய்த் துளசிச் செடி இலை


துவரை, உளுந்து போன்ற பயறுவகை விதைகளை நாய்த்துளசி இலைகளுடன் கலந்து சணல் சாக்கில் கட்டி சேமித்தால் பூச்சித் தாக்குதலில் இருந்து 3-6 மாதம் வரை தடுக்கலாம்.

 

எள் விதை சேமிப்பில் நெல்


எள் விதைகளை சேமிக்கும் போது 1 கிலோவிற்கு 10 கிராம் நெல் மணிகளை கலந்து சேமிப்பதால் எள் விதையை தாக்கும் இந்தியன் மாவு அந்துப்பூச்சி தாக்குலைக் குறைக்கலாம். நெல்லின் கூர்மையான பகுதியானது அந்துப்பூச்சியின் புழுக்கள் கூண்டுப்புழுப் பருவம் அடைவதற்கு தடையாக உள்ளது.

 

கேழ்வரகு விதை சேமிப்பில் வேம்பு மற்றும் தும்பை இலை


கேழ்வரகுடன் வேம்பு அல்லது தும்பை இலைகளை கலந்து வைப்பதால் ஓராண்டு வரை பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம்.

 

வசம்பு பவுடர்


வசம்பு ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். வசம்பை பொடியாக்கி நெல், பயறுவகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் விதைகளுடன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வசம்பு பொடி என்ற கணக்கில் கலந்து வைத்தால் ஓராண்டு காலம் வரை பூச்சிகள் அண்டாது.

 


நெல் விதை சேமிப்பில் புங்க இலை


புங்க இலைகளை நெல் விதை மூட்டைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் பூச்சிகள் வராவிடாமல் தடுக்கலாம்.

 

செம்மண் கரைசல்


துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறுவகை விதைகளை செம்மண் கலவையுடன் கலந்து காயவைத்த பின் சேமித்து வைத்தால் பூச்சிகள் அண்டாமல் ஒரு வருட காலம் வரை சேமிக்கலாம்.

 

விளக்கெண்ணெய்


பயறுவகை விதைகளில் விளக்கெண்ணெய் தடவி சேமித்தால் விதை சேமிப்பின் போது சேதப்படுத்தும் பூச்சிகள் தாக்காமலும் முட்டைகள் இடாமலும் தடுக்கலாம்.

 

சூடம்


எல்லா வகையான விதை சேமிப்பின் போதும் 5 கிலோ விதைக்கு ஒரு சூடம் என்ற கணக்கில் சேர்த்து சணல் சாக்கின் சேமிப்பதன் மூலம் அனைத்து வகையான பூச்சிகளையும் வராமல் தடுக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விதையினை வெயிலில் காயவைத்து புதியதாக சூடம் இட்டு சேமிக்க வேண்டும்.

 


காய்கறி விதை சேமிப்பில் மாட்டுச் சாணம்


ஈரமான மாட்டுச் சாணத்துடன் சுரை, பூசணி, பாகல், புடலை, சுரை, பீர்க்கை போன்ற விதைகளை ஈர மாட்டுச் சாணத்துடன் கலந்து வரட்டியாகத் தட்டி 2-3 நாட்கள் வெயிலில் காயவைத்து பின்பு சேமித்து வைத்தால் ஓராண்டுக்கும் மேலாக பூச்சித் தாக்குதலின்றி சேமிக்கலாம்.

 

அடுப்புச் சாம்பல்


சோள விதை சேமிப்பில் சாம்பல் மற்றும் சோள விதைகளை 1:4 என்ற விகிதத்தில் கலந்து வைத்தால் ஆறு மாத காலம் வரை பூச்சிகள் அண்டாது.

 

தகவல் வெளியீடு


மதுரை விதைப் பரிசோதனை அலுவலர் ம.மஹாலெட்சுமி, வேளாண்மை அலுவலர் அ. லயோலா அன்புக்கரசி.


மேலும் படிக்க....


2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் என்ன?


பார்த்தீனியக் களைகளை பக்குவமாக உரமாக மாற்ற வேளாண்மை அறிவியல் நிலையம் அறிவுறுத்தல்!!


PM Kisan 11வது தவணை இந்த நாளில் வெளியிடப்படும்! விவரங்களை அறிய உங்கள் நிலையைச் சரிபார்க்கவும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments