Random Posts

Header Ads

SBI வங்கி மூலம் KCC பெறுவது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை!!



SBI வங்கி மூலம் KCC  பெறுவது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை!!


நாட்டின் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 


குறுகிய கால கடன் வழங்குவதற்காக 1998-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD) உருவாக்கப்பட்ட திட்டமாகும்.



KCC மூலம் கடன் வாங்குவது, விவசாயிகளுக்கு பயனளிக்கும்


கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவது மிகவும் மலிவாகும். இது தவிர, இப்போது பிரதமர் கிசான் கிரெடிட் கார்டு, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) உடன் இணைக்கப்பட்டுள்ளது. 


4% வட்டி விகிதத்தில் கேசிசியில் இருந்து ரூ. 3 லட்சம் வரை கடன் பெறலாம். அதே நேரத்தில், PM Kisan பயனாளிகள் KCC-க்கு விண்ணப்பிப்பதும் தற்போது எளிதாகிவிட்டது. இந்த பிரச்சாரத்தில் வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 


ஏனெனில் இந்த அட்டைகள் வங்கியால் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதிலும் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கார்டு வாங்கினால் கூடுதல் பலன்கள் பெறலாம். இதைப் பற்றிய தகவலை கீழே அறிந்திடலாம்.

 


2 கோடிக்கும் அதிகமான KCC 


SBI-யின் கூற்றுப்படி, 'கொரோனா காலத்தில் 2 கோடிக்கும் அதிகமான கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது, அவற்றில் பெரும்பாலானவை சிறு விவசாயிகளுக்கு (Farmers) வழங்கப்பட்டன. 


இதில் விவசாயிகள் விவசாயத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நாட்டில் வரும் இணைப்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றால் பயனடைவர். விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய KCC வழங்கப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இதன் மூலம், அவர்கள் குறுகிய காலத்திற்குள் கடன் பெறுகிறார்கள், இதனால் அவர்கள் உபகரணங்கள் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க முடியும். அதே நேரத்தில், இதற்கான கடன் வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'

 


SBI வங்கி மூலம் KCC  பெறுவது எப்படி


SBI கிசான் கிரெடிட் கார்ட் பெற, உங்களுக்கு எஸ்பிஐயில் (SBI) கணக்கு இருத்தல் வேண்டும். நீங்கள், வங்கிக் கிளைக்குச் சென்று KCC-க்கு சேவைக்கும் விண்ணப்பிக்கலாம். 


இது தவிர, வீட்டிலிருந்தபடியே உங்கள் மொபைல் போன் மூலம் YONO செயலியைப் பயன்படுத்தி கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்திடலாம். யோனோ விவசாயத் தளத்திற்குச் (YONO agriculture platform) சென்று கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை

 

  • SBI YONO செயலியைப் பதிவிறக்கவும்.


  • அதன் பின்னர் அதில் லாக் இன் செய்து உள்ளே செல்லவும்.


  • பின்னர் YONO விவசாயம் என்ற சேவையை கிளிக் செய்யவும்.


  • அதன் பிறகு Khata-வுக்குச் செல்ல வேண்டும்.



  • KCC மதிப்பாய்வு (KCC Review) பகுதிக்குச் சென்று தகவல்களை சரிவர பார்க்க வேண்டும்.


  • இப்போது விண்ணப்பிக்கவும் (Apply) என்பதைக் கிளிக் செய்யவும்.


  • இந்த வழியில் விவசாயிகள் வீட்டில் இருந்த படி, SBI வங்கியில், ஆன்லைன் மூலம் KCC-க்கு எளிதாக விண்ணப்பித்திடலாம்.


மேலும் படிக்க....


PM Kisan 11வது தவணை இந்த நாளில் வெளியிடப்படும்! விவரங்களை அறிய உங்கள் நிலையைச் சரிபார்க்கவும்!!


Kisan Credit Card! கால்நடை வைத்திருப்போர் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!!


Kisan Credit Card கடன் திட்டம் புதிய மேம்படுத்தல்: திட்டத்தின் புதிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments