டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்! பல்வேறு வகையான இயந்திரங்களுக்கான மானியங்கள் அறிவிப்பு!
அரியலூர்
மாவட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக
வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனைப் பெறுவதற்கான வழிமுறைகளைத்
தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில் ஒன்றுதான் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டம். இது தமிழகத்தில்
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2021 & 2022 ஆம் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு மானியம்
எவ்வளவு?
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் இணையத்தளம் மூலம் வழிமுறைகளின் படி மானியம் பெற்று வருகின்றனர். இதன்படி அதிக பட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சம், நெல் நாற்று நடவு செய்யும் எந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் எந்திரங்களுக்கு ரூ.9 லட்சம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் எந்திரங்களுக்கு ரூ.2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றிற்கு ரூ.50 ஆயிரம், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக அளிக்கப்படுகிறது.
பல்வேறு வகையான கருவிகள் மானியத்தில்
விதை
விதைப்புக் கருவிகளுக்கு ரூ.78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63
ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 லட்சம், தென்னை
ஓலை துகளாக்கும் கருவிக்கு ரூ.63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.1.50 லட்சம்,
புதர் அகற்றும் கருவிகளுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தட்டைவெட்டும்
கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ.75 ஆயிரம், கரும்புசோலை
துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 லட்சம் அல்லது அவற்றின் மொத்தவிலையில் 50 சதவிகிதம்
இவற்றில் எது குறைவோ, அத்தொகைமானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும்
பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2021-&22 ஆம் ஆண்டில் வழங்கப்படுகிறது.
உழவன் செயலியில் பதிவு
அவசியம்
வேளாண்
இயந்திரங்களை மானியத்தில் பெற முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்திட
வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளத்தில் இணைக்கப்படும். விவசாயிகள்
தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட
முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம்.
குறிப்பிட்டவேளாண்
எந்திரங்கள், கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே எந்திரம் அல்லது
கருவியை தேர்வுசெய்தால், அவர் 1, 2, 3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்
சேர்க்கப்படுவர்.
விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்
ஒரு
நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை
மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்
அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் பெற இயலும்.
உதவி
செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு
நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் எந்திரங்கள்மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.
தகவல் வெளியீடு
ரமண
சரஸ்வதி
அரியலூர்
மாவட்ட ஆட்சியர்.
மேலும்
படிக்க....
SBI வங்கி மூலம் KCC பெறுவது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை!!
விவசாயிகளுக்கான Kisan கடன் உச்சவரம்பு பட்ஜெட்டில் ரூ.4 லட்சமாக வாய்ப்பு!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...