Random Posts

Header Ads

நெற்பயிரை தாக்கும் பல்வேறு வகையான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களின் மேலாண்மை!!

 


நெற்பயிரை தாக்கும் பல்வேறு வகையான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களின் மேலாண்மை!!


பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள்


இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும். தங்க நிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும். 


அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும். தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவி ல்காய்ந்து விடும். 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும். 



சூடான வெப்பநிலை (25-30 செ), அதிக ஈரப்பதம், மற்றும் மழை. அதிக காற்று வீசினால் காயங்களை ஏற்படுத்தும் மற்றும் மிகுந்த உரமளித்தல் பாசன நீர் மற்றும் சிதறல் அல்லது காற்றுடன் கலந்த மழை ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்புகிறது.


பாக்டீரியா இலைக்கருகல் நோய் கட்டுப்பாடு


தாங்கும் திறனுள்ள இரகங்களை பயிரிடுதல் (ஐஆர் 20, ஐஆர் 72, பொன்மணி, டிகேஎம் 6). பயிர் நடவு செய்யும் போது நாற்றுக்கள் கத்திரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 


அக்ரிமைசின் (0.025%), ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/லிட்டர் நீர்) உடன்வி தை நேர்த்தி செய்ய வேண்டும். 


ஸ்ட்ரெப்டோமைசின்சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் + காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ/எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். 



பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப் பின் ஒரு முறை இக்கலவையைத் தெளிக்கலாம்.

 

துங்ரோ வைரஸ் நோய் தாக்குதலின் அறிகுறிகள் 


நோய் தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, குறைந்த தூர்களுடன் காணப்படும். இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற மஞ்சள் நிறமாக மாறி விடும். 


துரு போன்ற நிறமுடைய புள்ளிகளும் ஏற்படும். இலை நுனியிலிருந்து நிற மாற்றம் தொடங்கி இலைத்தாள் அல்லது இலை அடிப்பரப்பு வரை விரிவடைகிறது. பூத்தல் தாமதம், சிறிய கதிர் மற்றும் முற்றிலும் வெளிவராத கதிர்கள். 


பெரும்பாலான கதிர்கள் மலட்டுத் தன்மையுடனும் அல்லது பகுதி நிரம்பிய தானியங்களுடனும் காணப்படும். நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் தாக்கக் கூடியது. துங்ரோ நச்சுயிரி நோய் குறிப்பாக தழைப்பருவத்தில் தாக்குதல் காணப்படும்.

 


மஞ்சள் நிற இலை பச்சைத் தத்துப்பூச்சி

 

புல் தழை குட்டை நோய் தாக்குதலின் அறிகுறிகள் 


நோய் தாக்கப்பட்ட குத்துக்கள் அனைத்தும் மிகவும் குட்டையாகி புல் போன்ற மற்றும் அதிக தூர்களுடனும் மிகவும் செங்குத்தான வளர்ச்சியுடனும் காணப்படும். 


இலைகள் குட்டையாகவும், குறுகியும், மஞ்சளான பச்சை நிறத்துடனும், அதிக துரு ஏறிய சிறுபுள்ளிகள் அல்லது துளைகளாகவும் தோன்றி பின் கொப்புளம் அல்லது பொட்டு போன்று உருவாகின்றன.


வளர்ச்சிக் குன்றிய குருத்துக்கள் புகையான்

 

இலைச்சுருள் குட்டை நச்சுயிரி தாக்குதலின் அறிகுறிகள் 


வளர்ச்சி குன்றிய பயிர்கள் தோன்றும். இலைகள் குட்டையாகவும் கரும்பச்சை நிறத்தில் ரம்பம் போன்ற ஓரங்களுடனும் காணப்படும். இலைத்தாள்களின் நுனிப்பகுதி அல்லது அடிப்பகுதியில் முறுக்கு ஏற்பட்டு இலைகள் சுருண்டு விடுகின்றன. 



இலை ஓரங்கள் சீராக இல்லாமலும் முறுக்கு ஏற்பட்டு சுருள் வடிவமாகக் காட்சியளிக்கும். சுருண்ட இலைப்பகுதிகள் மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள் நிறமாக இருக்கும். 


வெளிரிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்திலிருந்து கரும்பழுப்பு நிறமாக இலைத்தாள்கள் மற்றும் இலையுறைகளில் உள்ள நரம்புகள் வீக்கம் ஏற்பட்டு காணப்படும்.


சுருண்ட இலைப்பகுதிகள் வளர்ச்சி குன்றிய பயிர்கள்

 

வைரஸ் நோய்களை கட்டுப்படுத்தும் முறை

 

விளக்குப்பொறிகளை வயலில் வைக்க வேண்டும். நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஐஆர் 36, ஐஆர் 50, ஏடீடி 37, பொன்மணி, கோ 45, கோ 48, சுரேகா, விக்ரமார்யா, பரணி, மற்றும் வெள்ளைப் பொன்னி ஆகியவற்றை பயிரிடலாம். 


நோய் அதிகமாக தாக்கும் பகுதிகளில் பயறு வகை அல்லது எண்ணெய் வித்துப்பயிர்களுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும். நெருக்கமாய் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பூச்சிகளின் தாக்கத்தினைக் குறைக்க ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கும் இடையில் 30 செ.மீ இடைவெளி விட வேண்டும்.



நோய் பரப்பும் உயிரியான தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த தையமீத்தாக்சான் 25 WDG 100 கிராம்/ எக்டர் அல்லது இமிடாக்குலோபிரிட் 17.8 SL 100 மி.லி./ எக்டர், பாஸ்போமிடான் 40 எஸ்எல் 1000 மிலி/எக்டர் (அ) பாஸலோன் 35 இ.சி. 1500 மிலி/எக்டர் (அ) கார்பரில் 10 டீ 25 கிலோ/எக்டர் (அ) அசிஃபேட் 75 எஸ்.பி். 625 கிராம்/எக்டர் (அ) க்லோர்பைரிபாஸ் 20 இ.சி. 1250 மிலி/எக்டர் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு, யாழினி புகழேந்தி, ராஜகமலினி வேதநாராயணன், ராமினேனி பாக்யசரளா, பிரித்திகா குணசேகர், இளங்கலை வேளாண் மாணவர்கள், இராமலிங்கம், முனைவர் செ.சேகர், நிவேதா, திருவேங்கடம், உதவிப் பேராசிரியர்கள்,‍ பயிர் பாதுகாப்புதுறை, ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளவும்.

 

மேலும் படிக்க....


பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!!


அதிக மகசூல் பெற மாற்றுப்பயிர் சாகுபடி செய்வது மற்றும் ஒருங்கிணைந்த முறையில் களை மேலாண்மை!!


நெல் சாகுபடியில் பழைய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments