ஆடு வளர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் மற்றும் ஆடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
கிடா மற்றும் பெட்டை ஆடுகள் இரண்டிற்கும் தாடி உண்டு. ஆடுகளின் ஆயுட்காலம் 15 முதல் 18 வருடங்கள். தெற்காசிய நாடுகளில் ஆட்டிறைச்சி, கோழியின் இறைச்சிக்கு பிறகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காட்டு ஆடுகள், ஐரோப்பா, மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படும். வீட்டு ஆடுகளின் மூதாதையர்கள் தான் காட்டு ஆடுகள். இதன் ஆயுட் காலம், 12 முதல் 22 வருடங்கள் ஆகும். இந்தியாவில் மட்டும் 19 வகையான வெள்ளை ஆடுகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில், கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு ஆடு போன்ற வகைகள் இருக்கிறது. ஆப்பிரிக்க மொராக்கோ நாட்டில் மரம் ஏறி இலைகளை மேயக்கூடிய வெள்ளை ஆடுகள் இருக்கின்றன. பல வகையான இலை, தழைகளை உண்பதால், வெள்ளை ஆட்டு பாலுக்கு அதிக மருத்துவ குணம் உண்டு.
குறிப்பாக குடற்புண்ணை ஆற்றுவதற்கு வெள்ளையாட்டின் பால் பெரிதும் பயன்படுகிறது. அடுத்ததாக செம்மறி ஆடு, உலகில் மொத்தம் ஒரு பில்லியன் செம்மறி ஆடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. செம்மறி ஆடுகள், விவசாயத்திற்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்க்கப்பட்டது.
இவை, கம்பளி, பால் மற்றும் இறைச்சிக்காக தற்போது வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து, 45 கிலோ எடையுடைய கம்பளியை வெட்டி எடுக்கிறார்கள்.
கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில், நுண் மயிர் கொண்ட செம்மறி ஆடுகள், நடுத்தர மயிர் கொண்ட செம்மறி ஆடுகள், முரட்டு மயிர் கொண்ட செம்மறி ஆடுகள் மற்றும் பாதி முரட்டு மயிர் கொண்ட செம்மறி ஆடுகள் போன்ற நான்கு முக்கிய வகைகள் இருக்கிறது.
உலக
அளவில் இறைச்சிக்காக அதிகளவில் வளர்க்கப்படும் போயர் ஆட்டின் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா.
இவற்றின், வளர்ச்சி வேகம் பிரமிக்கத்தக்கது. பிறந்த குட்டி, 90 நாட்களில் 30 கிலோ எடையுடன்
இருக்கும்.
இந்த
வகையை சேர்ந்த கிடாய்கள், 120 முதல் 140 கிலோ எடை வரை வளரும். இந்த ஆடுகளுக்கு இயற்கையாகவே
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
உடல்
பலம் அதிகமுள்ள இந்த ஆடுகள், கடும் வெயில் மற்றும் மழையை தாங்கக்கூடியது. இறைச்சி ஏற்றுமதிக்காக
இந்தியாவில் பல ஆட்டு பண்ணைகளில் இந்த வகை ஆடுகள் வளர்க்கப்படுகிறது.
தகவல் வெளியீடு
கௌதமன்.தி, விதைச்சான்று உதவி இயக்குநர், சேலம்.
மேலும்
படிக்க....
கோழி வளர்ப்பில் தீவனங்களின் செலவினங்களை குறைப்பதற்கான சில உத்திகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...