Random Posts

Header Ads

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் தகவல்!!



குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் தகவல்!!


மத்திய பட்ஜெட்டில் தகவல்


வேளாண் விளை பொருள்களின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட் உரை 2022-23ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செவ்வாய்க் கிழமை நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார். வேளாண்மைத் துறை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

 


ராபி 2021-22 பருவத்தின் போது கோதுமை கொள்முதல் மற்றும் காரிப் 2021-22 பருவத்தின் போது நெல் கொள்முதலின் போது 163 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களின் கணக்குகளில் ரூ 2.37 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை நேரடியாக செலுத்தப்படும்.

 

விவசாயிகளுக்கான டிஜிட்டல் மற்றும் உயர் தொழில்நுட்ப சேவைகள்

 

அரசு தனியார் கூட்டு முறையின் கீழ் புதிய திட்டம் தொடங்கப்பட்டு டிஜிட்டல் மற்றும் உயர் தொழில்நுட்ப சேவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

 

வேளாண் மற்றும் ஊரக தொழில்களுக்கான ஸ்டார்ட்-அப் நிதி

 

வேளாண் துறையில் ஸ்டார்ட்-அப் சூழலியலுக்கு ஆதரவளிப்பதற்காக, கூட்டு மூலதனத்துடன் கூடிய நிதி நபார்டு மூலம் வழங்கப்படும். வேளாண் மற்றும் ஊரக தொழில் துறைகளில் உள்ள ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 


கென்-பெட்வா இணைப்பு திட்டம்

 

9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன பலன்களை வழங்கும் நோக்கத்துடன் ரூ 44,605 கோடி மதிப்பீட்டில் கென்-பெட்வா திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி பென்னாறு கிருஷ்ணா கோதாவரி ஆறுகள் இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 

விவசாயி டிரோன்கள்

 

பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களின் டிஜிட்டல்மயமாக்கல், பூச்சிக் கொல்லி மற்றும் ஊட்டச்சத்து தெளிப்பிற்காக விவசாயி டிரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதிசெய்யவும் பயன்படுத்தப்படும்

 

ரசாயனமில்லா இயற்கை விவசாயம்

 

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும். முதல்கட்டமாக கங்கை நதிக்கரையோரம் 5 கிமீ சுற்றளவுள்ள வழித்தடங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் கவனம் செலுத்தி, ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.

 

தினை பொருட்களுக்கான ஆதரவு

 

அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டல், உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தினை உற்பத்திக்களை வர்த்தகம் செய்வதற்கு பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 


எண்ணெய் வித்துகள் உற்பத்தி திட்டம்

 

உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தப்படும். எண்ணெய் வித்துக்கள், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.

 

உணவு பதப்படுத்தும்முறை

 

விவசாயிகள் “பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருத்தமான வகைகளை ஏற்றுக்கொள்வதற்கும், “பொருத்தமான உற்பத்தி மற்றும் அறுவடை நுட்பங்களை பயன்படுத்துவதற்கும், மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஒரு விரிவான தொகுப்பை அரசு வழங்கும்.

 

ஜீரோ பட்ஜெட் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மதிப்புக் கூட்டல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

 


விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியின் உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும்.

 

மேலும் படிக்க....


நெல் சாகுபடியில் பழைய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்!!


அதிக மகசூல் பெற மாற்றுப்பயிர் சாகுபடி செய்வது மற்றும் ஒருங்கிணைந்த முறையில் களை மேலாண்மை!!


ஒருங்கிணைந்தப் பண்ணை அமைக்க 50 விவசாயிகளுக்கு தலா ரூ. 45,000 மானியம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments