பயிர்கள் அறுவடை செய்ய மிக குறைந்த வாடகை நிர்ணயம்! வேளாண்துறை அறிவிப்பு!!
குறைந்த
செலவில், சோளப்பயிர் அறுவடையை முடிக்க, அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என, வேளாண்
பொறியியல் துறை அறிவித்துள்ளது. இதனை வேளாண் துறை மூலம் விவசாயிகள் வாடகைக்குப் பெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி சாகுபடியில், சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. குறைந்த செலவில், தீவனம் தயாரிக்க, சோளம் சாகுபடியே சிறப்பானத் தேர்வு. எனவே இந்த மாவட்டத்தில் ஏராளமான சோளம் சாகுபடியைத் தேர்வு செய்கின்றனர்.
தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவத்தில், கனமழை பெய்ததால், மானாவாரி சோளப்பயிர், வழக்கத்தை விட உயரமாக வளர்ந்துள்ளது. தற்போது விவசாயிகள் அறுவடையைத் துவக்கத் தயாராகி வருகின்றனர்.
வேலை
உறுதித்திட்ட பணிகளால், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால்
விவசாயிகள் வளர்ந்து நிற்கும் சோளத்தை அறுவடை செய்ய வழியில்லாமல் தவிக்கும் நிலை உருவாகி
உள்ளது.
அறுவடை இயந்திரம் ரூ.400
வாடகை
இதனைக்
கருத்தில்கொண்டு,விவசாயிகளின் இக்கட்டான நிலையைப் போக்கும் வகையில், வேளாண் பொறியியல்
துறை சார்பில், சோளத்தட்டு அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கும் திட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.
டிராக்டரில்
பொருத்திய, அறுவடை இயந்திரம் வாயிலாக, ஒரு ஏக்கர் சோளப்பயிரை, ஒன்றரை மணி நேரத்தில்
அறுவடை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது
குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஒரு மணிக்கு, ரூ.400 வாடகையில்,
சோளப்பயிர் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தலாம்.
திருப்பூர்
கோட்டத்தில் தாராபுரம் மற்றும் உடுமலையில், தலா ஒரு இயந்திரம் பயன்பாட்டுக்கு உள்ளது.
சோளப்பயிர் அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள், அந்தந்த உதவி பொறியாளர் அலுவலகத்தில்,
பதிவு செய்து, எளிய முறையில் அறுவடை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும்
படிக்க....
டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்! பல்வேறு வகையான விவசாய இயந்திரங்களுக்கான மானியங்கள் அறிவிப்பு!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...